தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாதந்தோறும் ரூ.2,000 வழங்க உரிமை கோர முடியாது கர்நாடக அரசு திட்டவட்டம்

மாதந்தோறும் ரூ.2,000 வழங்க உரிமை கோர முடியாது கர்நாடக அரசு திட்டவட்டம்

மாதந்தோறும் ரூ.2,000 வழங்க உரிமை கோர முடியாது கர்நாடக அரசு திட்டவட்டம்


UPDATED : நவ 06, 2026 07:21 PM

ADDED : நவ 05, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:21 PM ADDED : நவ 05, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘ கர்நாடக அரசின் கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், மாதந்தோறும் வழங்கப்படும் 2,000 ரூபாயை பயனாளிகள் தங்களின் உரிமையாக, சட்டப்பூர்வமாக கோர முடியாது’ என, உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூ ரை சேர்ந்த கங்கா, பவித்ரா ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கர்நாடகாவில் கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

‘கடந்த 2024 – 25 நிதியாண் டின் பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான மானியம், பயனாளிகளுக்கு சென்றடையவில்லை. இந்த தொகையை விடுவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

இம்மனு நீதிபதிகள் அனு சிவராமன், பரத்குமார் ஆகியோர் முன் விசாரிக்கப்படுகிறது. மாநில அரசு தரப்பில் நேற்று பதில் அளிக்கப்பட்டது.

அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘கர்நாடகாவில் 1.26 கோடி பெண் பயனாளிகளுக்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பலனை அரசு வழங்க தவறிவிட்டது என்று மனுதாரர்கள் மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளனர். இத்திட்டம், அரசின் நிர்வாக அவசர நிலைகள், நிதி நெருக்கடிகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகிறது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு, இதை செயல்படுத்தும்படி பயனாளிகள் கோர முடியாது’ என, கூறினார்.

அரசின் ஆட்சேபனையை கேட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்கள் ஒத்திவைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us