தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கமிஷனர் அலுவலகம் முன் திடீரென தீப்பிடித்த கார்

கமிஷனர் அலுவலகம் முன் திடீரென தீப்பிடித்த கார்

கமிஷனர் அலுவலகம் முன் திடீரென தீப்பிடித்த கார்


UPDATED : அக் 11, 2026 12:38 AM

ADDED : அக் 10, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 12:38 AM ADDED : அக் 10, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: நடுரோட்டில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு இன்பேன்டரி சாலையில் நேற்று காலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவ்வழியாக வந்த, 'டொயோட்டா' நிறுவனத்தின் 'அர்பன் குரூசர் ஹைரைடர்' வகை சிவப்பு காரின் முன் பக்கத்தில் திடீரென தீ ஏற்பட்டது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு முன், உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதில், பதற்றம் அடைந்த காரின் ஓட்டுநர் ஷபீர் உடனடியாக காரிலிருந்து வெளியே வந்து, தப்பி ஓடினார். காரில் வேறு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பானை பயன்படுத்தினர். இருப்பினும், தீ அணையவில்லை. இதனால், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், தீயை அணைத்தனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார் என்ஜினில் ஏற்பட்ட மின்கசிவால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us