/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கார்கே குறித்து அவதுாறு பேச்சு சூலிபெலே மீதான வழக்கு ரத்து
/
கார்கே குறித்து அவதுாறு பேச்சு சூலிபெலே மீதான வழக்கு ரத்து
கார்கே குறித்து அவதுாறு பேச்சு சூலிபெலே மீதான வழக்கு ரத்து
கார்கே குறித்து அவதுாறு பேச்சு சூலிபெலே மீதான வழக்கு ரத்து
ADDED : ஜூலை 26, 2025 05:02 AM

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை 'லாயக்கற்றவர்' என்று கூறியதாக, ஹிந்துத்துவா பிரமுகர் சக்ரவர்த்தி சூலிபெலே மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ராய்ச்சூர் மாவட்டம், சிரிவாராவில் 'நமோ பிரிகேட்' சார்பில் 2014 ஜனவரி 18ம் தேதி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய ஹிந்துத்துவா பிரமுகர் சக்ரவர்த்தி சூலிபெலே, 'காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே லாயகற்றவர்' என்று கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரம்மாவர் போலீசில், கலபுரகி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜக்தேவ் குட்டதோர் கல்கி புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சக்ரவர்த்தி சூலிபெலே மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், எஸ்.சி., - எஸ்.டி., சட்டத்தின் கீழ் அவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது. அதேவேளையில், ஐ.பி.சி., பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அவர் மீது விசாரணை நடத்தலாம்' என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 'லாயகற்றவர்' என்ற வார்த்தை, கர்நாடக உயர் நீதிமன்றம் 'அயோக்கியன்' என தவறாக புரிந்து கொண்டுள்ளது' என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சக்ரவர்த்தி சூலிபெலே மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது.
- நமது நிருபர் -

