/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துணை நடிகர் பலி ரிஷப் ஷெட்டி மீது வழக்கு?

துணை நடிகர் பலி ரிஷப் ஷெட்டி மீது வழக்கு?

துணை நடிகர் பலி ரிஷப் ஷெட்டி மீது வழக்கு?

துணை நடிகர் பலி ரிஷப் ஷெட்டி மீது வழக்கு?

துணை நடிகர் பலி ரிஷப் ஷெட்டி மீது வழக்கு?

ADDED : மே 09, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ஆற்றில் மூழ்கி ஜூனியர் ஆர்டிஸ்ட் பலியான சம்பவத்தில், நடிகர் ரிஷப் ஷெட்டி மீது வழக்குப்பதிவு செய்வதுடன், பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றும் கர்நாடக அரசுக்கு, அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கோரிக்கை வைத்து உள்ளது.

இதுகுறித்து சங்கம் வெளியிட்டு உள்ள அறிக்கை:

உடுப்பி கொல்லுார் பகுதியில் நடந்து வரும், காந்தாரா 2 படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வந்த, கேரளாவின் மூசரித்திரா கிராமத்தின் கபில், 33; கடந்த 6ம் தேதி சவுபர்ணிகா ஆற்றில் மூழ்கி இறந்து உள்ளார். சமீபகாலமாக படப்பிடிப்பு தளங்களில் தொழிலாளர்கள் இறந்ததால், தொழிலாளர்கள் மீதே தவறு உள்ளது என்பது போன்ற கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தொழிலாளர்கள் இறக்கும் சம்பவங்களின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுகின்றனர்.

தவறான தகவல்களை வழங்குகின்றனர். உண்மையை யாராவது வெளியே சொல்ல வந்தால் மிரட்டுகின்றனர். கபில் மரணத்தின் உண்மையை கண்டறிய கர்நாடக அரசு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.

கபில் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா உதவ வேண்டும்.

காந்தாரா 2 தயாரிப்பாளரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, அவரது தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

அந்த பட நிறுவனம், கபில் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.