/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை; மூன்று பேர் மீதான வழக்கு ரத்து உறுதி
/
திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை; மூன்று பேர் மீதான வழக்கு ரத்து உறுதி
திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை; மூன்று பேர் மீதான வழக்கு ரத்து உறுதி
திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை; மூன்று பேர் மீதான வழக்கு ரத்து உறுதி
ADDED : மார் 29, 2025 06:54 AM
திரைப்பட தயாரிப்பாளர் சவுந்தர்யா ஜெகதீஷ் தற்கொலை வழக்கில், மூன்று பேர் மீது பதிவான வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சவுந்தர்யா ஜெகதீஷ், 51. கடந்த ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி தன் வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி சசிரேகா அளித்த புகாரில் சவுந்தர்யா ஜெகதீஷ் தொழில் கூட்டாளிகள் சுரேஷ், ஹொம்பண்ணா, சுதீந்திரா ஆகியோர் மீது கடந்த மே 22ம் தேதி, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவானது.
தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, மூன்று பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேர் மீதும், தற்கொலைக்கு துாண்டியதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி, வழக்கை ரத்து செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சசிரேகா மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு விசாரித்தது. மனு மீதான வாதங்கள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
தற்கொலை செய்தவர் எழுதிய கடிதத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரின் பெயர்களையும் குறிப்பிடவில்லை. இறந்தவர் தன் வாழ்நாளில் வேறு நபர்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர் தான் புகார் அளித்திருக்க வேண்டும். அவரது மனைவி இல்லை.
இறந்தவர் மனைவி ஒரு மாத காலம் புகார் அளிக்காமல் அமைதியாக ஏன் இருந்தார் என்பது எங்கள் கேள்வி. குற்றச்சாட்டு அனைத்தும் மரணத்திற்கு பின்னர் யோசித்தவை என்று நாங்கள் கருதுகிறோம்.
போலீசாரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலும் போதுமான தகவல் இல்லை. இதனால் பிரதிவாதிகள் மீதான வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

