/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.99 லட்சம் கடன் விவகாரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
/
ரூ.99 லட்சம் கடன் விவகாரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
ரூ.99 லட்சம் கடன் விவகாரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
ரூ.99 லட்சம் கடன் விவகாரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : டிச 30, 2025 06:46 AM

பீதர்: பசவ கல்யாணா பா.ஜ., - எம்.எல்.ஏ., சரணு சலகர் மீது, 99 லட்சம் ரூபாய் காசோலை மோசடி வழக்கு பதிவாகியுள்ளது.
பீதர் மாவட்டம், பசவ கல்யாணா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரணு சலகர். இவர் 2023ன் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தேர்தல் செலவுகளுக்காக தொழிலதிபரும், தன் உறவினருமான சஞ்சய் குமார் என்பவரிடம், 99 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடன் பெறும் போது, உத்தரவாதமாக வெற்று காசோலை மற்றும், 'லெட்டர் ஹெட்'டில் கையெழுத்திட்டு கொடுத்திருந்தார்.
கடன் வாங்கி ஆண்டுக்கணக்கில் ஆகியும், திருப்பித்தராமல் இழுத்தடித்தார். தொழிலதிபர் சஞ்சய்குமார் பலமுறை கேட்டும், எம்.எல்.ஏ., சரணு சலகர் பொருட்படுத்தவில்லை. அதன்பின் சஞ்சய் குமார், நடப்பாண்டு செப்டம்பர் 14ம் தேதி, தனக்கு அறிமுகமுள்ள முக்கிய புள்ளிகளின் மூலம் கேட்ட போது, பணத்தை திருப்பி தர சரணு சலகர் சம்மதித்தார்.
கடன் தொகைக்கான காசோலை கொடுத்தார். அந்த காசோலையை சஞ்சய் குமார், வங்கியில் போட்ட போது அந்த வங்கியில் இருந்த கணக்கை, எம்.எல்.ஏ., சரணு சலகர் ஏற்கனவே மூடியது தெரிந்தது. இது பற்றி விசாரிக்க சென்ற சஞ்சய் குமாரின் மனைவி, மகனை தகாத வார்த்தைகளில் சரணு சலகர் திட்டியுள்ளார். சஞ்சய் குமாரையும் மிரட்டினார்.
இதனால் விரக்தி அடைந்த சஞ்சய்குமார், பெங்களூரின் ஏ.சி.ஜெ.எம்., நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி பசவ கல்யாணா நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்படி போலீசாரும் எம்.எல்.ஏ., சரணு சலகர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.

