/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருமகளுக்கு தொல்லை மாமனார் மீது வழக்கு
/
மருமகளுக்கு தொல்லை மாமனார் மீது வழக்கு
ADDED : நவ 21, 2025 06:16 AM
நெலமங்களா: 'மாடர்ன்' உடை அணிந்து தன் முன் வரும்படியும், தன்னுடன் உறவில் இருக்கும்படியும் மருமகளுக்கு தொல்லை கொடுத்த மாமனார், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரு ரூரல் நெலமங்களாவில் வசிப்பவர் நாகராஜ், 55; தனியார் கல்லுாரியில் பேராசிரியர். இவரது மகன் கோவர்த்தன், 28.
இவருக்கும், 26 வயது இளம்பெண்ணுக்கும் 2023ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது. தம்பதிக்கு குழந்தை இல்லை.
திருமணமான புதிதில் தம்பதி மகிழ்ச்சியாக இருந்தனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்த கோவர்த்தனுக்கு சொந்தமாக தொழில் துவங்க ஆசை ஏற்பட்டது. இதற்காக பணம், நகையை வரதட்சணையாக வாங்கி வரும்படி மனைவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். வரதட்சணை வாங்கி வர இளம்பெண் மறுத்ததால், கோவர்த்தனும், நாகராஜும் ஆபாசமாக திட்டி உள்ளனர்.
'திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன; இன்னும் ஏன் குழந்தை பிறக்கவில்லை? என்னுடன் உறவில் இருந்து குழந்தை பெற்றுக் கொள். 'மாடர்ன்' உடை அணிந்து என் முன் வா' என்று, மருமகளிடம், நாகராஜ் ஆபாசமாக பேசி உள்ளார்.
இதுபற்றி கணவர், மாமியாரிடம் கூறியபோது, அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மனம் உடைந்த இளம்பெண், கணவர், மாமனார் மீது நெலமங்களா போலீசில், 16ம் தேதி புகார் செய்தார்.
விசாரணை நடத்திய போலீசார், நாகராஜ், கோவர்த்தன் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை நடக்கிறது.

