/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரிந்து வாழும் மனைவியை கண்காணித்த கணவர் மீது வழக்கு
/
பிரிந்து வாழும் மனைவியை கண்காணித்த கணவர் மீது வழக்கு
பிரிந்து வாழும் மனைவியை கண்காணித்த கணவர் மீது வழக்கு
பிரிந்து வாழும் மனைவியை கண்காணித்த கணவர் மீது வழக்கு
ADDED : ஜன 28, 2026 08:51 AM
புட்டேனஹள்ளி: பிரிந்து வாழும் மனைவியின் மொபைல் போனில் செயலியை ஏற்றி, அவரை கண்காணித்த கணவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
பெங்களூரு புட்டேனஹள்ளியில் வசிப்பவர் அமல் நாயர், 30. இவரது மனைவி ஆர்யா சாரதா, 28. டாக்டர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்ப தகராறில் தம்பதி பிரிந்தனர். விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது.
ஆர்யா சாரதாவுடன் வசிக்கும் குழந்தையை, மாதத்திற்கு ஒரு முறை பார்க்க அமல் நாயருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தையை பார்க்க மனைவி வீட்டிற்கு சென்ற அமல் நாயர், மனைவியின் மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தார்.
இந்த செயலியை மூலம் மனைவி தினமும் எங்கெங்கு செல்கிறார், யாரிடம் பேசுகிறார் என்று கண்காணித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன், ஆர்யா சாரதாவின் மொபைல் போன் பழுதானது. பழுது நீக்க கொடுத்த போது, செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது பற்றி அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து நேற்று முன்தினம் புட்டேனஹள்ளி போலீசில் புகார் செய்தார். அமல் நாயர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

