/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஆப்பரேஷன் சிந்துார்' அவதுாறு கல்லுாரி மாணவி மீது வழக்கு
/
'ஆப்பரேஷன் சிந்துார்' அவதுாறு கல்லுாரி மாணவி மீது வழக்கு
'ஆப்பரேஷன் சிந்துார்' அவதுாறு கல்லுாரி மாணவி மீது வழக்கு
'ஆப்பரேஷன் சிந்துார்' அவதுாறு கல்லுாரி மாணவி மீது வழக்கு
ADDED : மே 10, 2025 11:51 PM
தட்சிண கன்னடா: பாகிஸ்தான் மீதான இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து விமர்சித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்ட கல்லுாரி மாணவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பெல்தங்கடி அருகில் உள்ள பேலலுவை சேர்ந்தவர் ரேஷ்மா பாரிகர், 22. மங்களூரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
பாகிஸ்தான் மீதான் இந்திய அரசின் 'ஆப்பரேஷன் சிந்துார்' குறித்து தன் இன்ஸ்டாகிராமில், மாணவி பதிவிட்டிருந்தார். அதில், 'திக்காரா ஆப்பரேஷன் சிந்துாரா' என்று ஹாஷ்டாக் பயன்படுத்தி, போரினால் இருள் சூளும்' என்று கன்னடத்தில் பதிவிட்டிருந்தார்.
இப்பதிவுக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, அந்த பதிவை நீக்கிய அவர், தன்னை காத்துக் கொள்ள மற்றொரு பதிவு வெளியிட்டிருந்தார்.
கல்லஹள்ளியை சேர்ந்த சந்திரசேகர் புட்டா மாரத்தி என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ரேஷ்மா பாரிகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் நேற்று தெரிவித்தனர்.