/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நில அபகரிப்பு புகாரில் தயாரிப்பாளர் மீது வழக்கு
/
நில அபகரிப்பு புகாரில் தயாரிப்பாளர் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2025 11:43 PM

வர்த்துார் : நிலத்தை அபகரித்ததுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விவசாயி புகார் அளித்ததைத் தொடர்ந்து, கன்னட திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா, அவரது நண்பர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரு வர்த்துார் அருகே கசவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி; விவசாயி. இவர் பெயரில் 3.35 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை கன்னட திரைப்பட தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா, அவரது நண்பர் சச்சின் நாராயண் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி ராமமூர்த்தி கேட்டபோது, கிருஷ்ண சைதன்யாவும், சச்சின் நாராயணும், ராமமூர்த்தியை ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. விவசாயி புகார் அளித்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர், அவரது நண்பர் மீது வழக்குப் பதிவானது.
இதற்கிடையில் தங்கள் நிலத்தை அபகரித்ததாக ராமமூர்த்தி, அவரது உறவினர்கள் சதீஷ், சுனில், சிவராம், ராகவேந்திரா ஆகியோர் மீது கிருஷ்ண சைதன்யாவும் புகார் செய்தார். அந்த புகார் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.