/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகை காவ்யா கவுடாவை மிரட்டிய உறவினர் மீது வழக்கு
/
நடிகை காவ்யா கவுடாவை மிரட்டிய உறவினர் மீது வழக்கு
நடிகை காவ்யா கவுடாவை மிரட்டிய உறவினர் மீது வழக்கு
நடிகை காவ்யா கவுடாவை மிரட்டிய உறவினர் மீது வழக்கு
ADDED : ஜன 28, 2026 06:51 AM

ராமமூர்த்திநகர்: குடும்ப தகராறில், நடிகை காவ்யா கவுடாவை பலாத்காரம் செய்வதாக மிரட்டிய, உறவினர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
கன்னடத்தில் வெளியான ராதா ராமனா, காந்தாரி, ராதா ராகவ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை காவ்யா கவுடா. இவருக்கும் தொழில் அதிபர் சோமசேகருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின், பெங்களூரு ராமமூர்த்திநகர் எஸ்.ஆர்.ஐ., லே - அவுட்டில் உள்ள கணவர் வீட்டில் வசித்தார். இந்த வீட்டில் சோமசேகர் தம்பி நந்திஷ், அவரது மனைவி பிரேமாவும் வசித்தனர்.
இந்நிலையில், காவ்யாவுக்கும், பிரேமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். இந்நிலையில், ராமமூர்த்திநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காவ்யா அளித்த புகாரில், குடும்ப தகராறில் என்னையும், என் கணவரையும், கணவரின் தம்பி மனைவியான பிரேமாவின் குடும்பத்தினர் தாக்கினர்.
என் கணவரை கத்தியால் முதுகில் குத்தினர். பிரேமாவின் உறவினரான ரவிகுமார் என்னை பொது இடத்தில் பலாத்காரம் செய்வதாக மிரட்டினார்.
எங்களை தாக்கிய பிரேமா, நந்திஷ், பிரியா, ரவிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவானது.
இதற்கிடையில், காவ்யாவும், அவரது கணவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாக, பிரேமாவும் எதிர் புகார் அளித்தார். அந்த புகாரின்படி விசாரணை நடக்கிறது.
இப்போது குடியிருக்கும் வீட்டை முழுமையாக கைப்பற்றவும், எங்களை வீட்டில் இருந்து வெளியேற்றவும் காவ்யா பொய் புகார் அளித்ததாக, பிரேமா குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

