/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனிப்பட்ட புகைப்படங்கள் பகிர்வு சீரியல் நடிகை ஆஷா ஜோயிஸ் மீது வழக்கு
/
தனிப்பட்ட புகைப்படங்கள் பகிர்வு சீரியல் நடிகை ஆஷா ஜோயிஸ் மீது வழக்கு
தனிப்பட்ட புகைப்படங்கள் பகிர்வு சீரியல் நடிகை ஆஷா ஜோயிஸ் மீது வழக்கு
தனிப்பட்ட புகைப்படங்கள் பகிர்வு சீரியல் நடிகை ஆஷா ஜோயிஸ் மீது வழக்கு
ADDED : அக் 25, 2025 10:56 PM

திலக்நகர்: தோழியின் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக, சீரியல் நடிகை ஆஷா ஜோயிஸ் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
பெங்களூரு, திலக்நகர் போலீஸ் நிலையத்தில் பார்வதி, 61, என்பவர் நேற்று முன்தினம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த 2023ல் எனக்கும், சீரியல் நடிகை ஆஷா ஜோயிஸுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிருங்கேரி மடத்தின் ஜோயிஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும்; சீரியல் நடிகை என்றும் தன்னை அவர் அறிமுகப்படுத்தினார்.
நான் வேலை செய்த நிறுவனத்தின் உரிமையாளரை திருமணம் செய்துள்ளேன். என் கணவரை மிரட்டி 2 கோடி ரூபாய் வாங்கும்படி, ஆஷா ஜோயிஸ் என்னிடம் கூறினார். இதற்கு நான் மறுத்ததால் எனக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்தார். என் மொபைல் போனில் இருந்து, என்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோவை எடுத்தார்.
அதை எனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன்மூலம் பொது இடத்தில் என் மானம் போய் உள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரின்படி ஆஷா ஜோயிஸ் மீது நேற்று வழக்குப்பதிவானது. கன்னட சின்னத்திரையில் பல சீரியல்களில் துணை நடிகையாக நடித்து உள்ள ஆஷா ஜோயிஸ், 2016ல் 'மிஸ் இந்தியா பிளானட்' என்ற போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

