/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காவிரி ஆரத்தி நடந்தே தீரும்: காங்., - எம்.எல்.ஏ., உறுதி
/
காவிரி ஆரத்தி நடந்தே தீரும்: காங்., - எம்.எல்.ஏ., உறுதி
காவிரி ஆரத்தி நடந்தே தீரும்: காங்., - எம்.எல்.ஏ., உறுதி
காவிரி ஆரத்தி நடந்தே தீரும்: காங்., - எம்.எல்.ஏ., உறுதி
ADDED : ஜூன் 11, 2025 08:17 AM

மாண்டியா : “கே.ஆர்.எஸ்.,சில் காவிரி ஆரத்தி நடத்தியே தீருவோம். மாண்டியா மாவட்ட இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கில், பொழுதுபோக்கு பூங்கா அமைப்போம்,” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கானிகா தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் கூறியதாவது:
கே.ஆர்.எஸ்.,சில் காவிரி ஆரத்தி நடத்தினால், பொழுதுபோக்குப் பூங்கா அமைந்தால், மாண்டியா மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். உள்நாடு, வெளி நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணியர், கே.ஆர்.எஸ்.,க்கு வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கும்.
திட்டத்தால் ஏற்படும் நற்பலன்களை, எதிர்க்கட்சியினரும், திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்போரும் புரிந்து கொள்ள வேண்டும். மாண்டியா பெரிய கிராமம் போன்றுள்ளது. இதை மேம்படுத்த வேண்டும். மக்கள் இங்கு வர வேண்டும். காவிரி ஆரத்தி, பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இரண்டு திட்டங்களால் கே.ஆர்.எஸ்., அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அபாயமும் இல்லை.
மக்கள் வந்தால் அணையின் கற்களை குத்துவார்களா? அப்படி எந்த பிரச்னையும் ஏற்படாது. எனவே காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை, எங்கள் அரசு நடத்தியே தீரும். அதேபோன்று பொழுதுபோக்கு பூங்காவும் அமைக்கும்.
வெறும் 20 ரூபாய் கற்பூரம் ஏற்றுவதற்கு, 100 கோடி ரூபாய் தேவையா என, விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். கற்பூரம் ஏற்ற 20 ரூபாய் போதும். ஆனால் நிகழ்ச்சிக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். 20,000 மக்கள் அமர்ந்து நிகழ்ச்சியை காண, வசதி செய்ய வேண்டும். திட்ட அறிக்கை தயாராக உள்ளது. இதை வாங்கிப் பார்க்கட்டும்.
என்னென்ன வசதிக்கு, எவ்வளவு செலவாகும் என்பதை ஆய்வு செய்யட்டும். ஊழல் நடப்பது தெரிந்தால் வழக்கு போடுங்கள், சிறைக்கு அனுப்புங்கள். அதை விட்டு விட்டு, திட்டத்தை செயல்படுத்தும் முன்பே, அது ஏன், இது ஏன் என, கேள்வி எழுப்புவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.