/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வால்மீகி ஆணைய முறைகேடு 3 பேருக்கு சி.பி.ஐ., சம்மன்
/
வால்மீகி ஆணைய முறைகேடு 3 பேருக்கு சி.பி.ஐ., சம்மன்
வால்மீகி ஆணைய முறைகேடு 3 பேருக்கு சி.பி.ஐ., சம்மன்
வால்மீகி ஆணைய முறைகேடு 3 பேருக்கு சி.பி.ஐ., சம்மன்
ADDED : பிப் 06, 2025 11:04 PM
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், விசாரணைக்கு ஆஜராக மூன்று பேருக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது.
கர்நாடக பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட வால்மீகி மேம்பாட்டு ஆணையத்திற்கு அரசு ஒதுக்கிய 189 கோடி ரூபாய் நிதியில் 94 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சில வங்கி அதிகாரிகள், ஊழியர்களுக்கும் தொடர்பு இருந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி, அமலாக்கத் துறையும் ஒரு பக்கம் விசாரிக்கிறது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் கணக்கர் பரசுராம், தெலுங்கானா தொழில் அதிபர்கள் சத்யநாராயண ராவ், சந்திரமோகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமினில் வெளியே உள்ளனர்.
இந்நிலையில் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி சத்யநாராயண ராவ், பரசுராம், சந்திரமோகன் ஆகிய மூன்று பேருக்கும் தற்போது சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணையின் போது இவர்கள் நாகேந்திராவின் பெயரை கூறினால், அவருக்கு மீண்டும் சிக்கல் என்றும் கூறப்படுகிறது.

