/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தைகளை அதிகம் கவரும் மத்திய அரசு புத்தக ஸ்டால்
/
குழந்தைகளை அதிகம் கவரும் மத்திய அரசு புத்தக ஸ்டால்
குழந்தைகளை அதிகம் கவரும் மத்திய அரசு புத்தக ஸ்டால்
குழந்தைகளை அதிகம் கவரும் மத்திய அரசு புத்தக ஸ்டால்
ADDED : டிச 14, 2025 07:35 AM

-- நமது நிருபர் - -:
பெங்களூரு தமிழ் புத்தக திருவிழாவில், மத்திய அரசு கல்வித்துறை சார்பில் 'நேஷனல் புக் டிரஸ்ட்' புத்தக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் திருக்குறள் புத்தகங்கள், ஜெயகாந்தன் சிறுகதைகள், தமிழ் சிறுகதைகள் புத்தகங்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர குழந்தைகள் அதிகம் விரும்பும் புத்தகங்களும் விற்பனை ஆகின்றன.
இந்த புத்தக அரங்கின் விற்பனை பிரதிநிதி நாகேஷ் கூறியதாவது:
தமிழ் புத்தக திருவிழாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு குழந்தைகளுடன் வருவோர், குழந்தைகளை அதிகம் கவரும் புத்தகங்களை வாங்கி கொடுக்கின்றனர். எங்கள் அரங்கில் 'டைல்ஸ் ஆப் 2 டாக்ஸ்', 'பிரண்ட்ஸ் புக், ஐ அம் பெட்டர் தென் யூ', 'மனோஜ் குமார் பாண்டே' கதை புத்தகங்கள் அதிகம் கவருகின்றன. மற்ற அரங்குகளை விட எங்கள் அரங்கில், புத்தகம் குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம். அனைத்து புத்தகங்களையும் 10 சதவீதம் தள்ளுபடியில் கொடுக்கிறோம். எங்கள் புக் டிரஸ்டில் உறுப்பினராக இருந்தால் 20 சதவீதம் தள்ளுபடியிலும்; பள்ளி மாணவர்களுக்கு 25 சதவீத தள்ளுபடியிலும் புத்தகம் கொடுக்கிறோம். மொத்தமாக வாங்கினால் 35 சதவீதம் தள்ளுபடியில் புத்தகம் கொடுக்கிறோம். பிரபல, புதிய எழுத்தாளர்கள்புத்தகம் இங்கு உள்ளன.
இவ்வாறு அவர்கூறினார்.

