ADDED : அக் 16, 2025 11:19 PM

-
கர்நாடக மாநில பேட்மின்டன், கேரள பேட்மின்டன் சங்கம் இணைந்து 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளை, தாவணகெரேயில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உள்விளையாட்டு அரங்கில் நடத்துகின்றன. காலியிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தன.
பெங்களூரு வீரர் திர் பெங்கேரி தன்னை எதிர்த்து விளையாடிய ஓம்கார் பட்டை 15 - 11; 15 - 6 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் பெங்களூரின் அர்மான் கான் - பிரஜ்வல் மோதினர். பிரஜ்வலை 15 - 10; 15 - 4 என்ற செட் கணக்கில் அர்மான் கான் வீழ்த்தினார். இதன்மூலம் திர் பெங்கேரி, அர்மான் கான் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.
பெண்களுக்கான பிரிவில் பெங்களூரின் சந்தனா 15 - 7; 15 - 5 செட் கணக்கில் தன்னை எதிர்த்து விளையாடிய நாகபிரக்யாவை தோற்கடித்தார்.
இன்னொரு பெங்களூரு வீராங்கனை பிரணிகா 15 - 2; 15 - 4 என்ற செட்டில் சஞ்சனா ஹிராவை வீழ்த்தி, கால் இறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டிகள் இன்று நடக்க உள்ளன.
- நமது நிருபர்