தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/வரலாற்று சிறப்பு மிக்கது சந்திரவல்லி குகை!

வரலாற்று சிறப்பு மிக்கது சந்திரவல்லி குகை!

வரலாற்று சிறப்பு மிக்கது சந்திரவல்லி குகை!


UPDATED : நவ 19, 2026 12:00 AM

ADDED : நவ 18, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 12:00 AM ADDED : நவ 18, 2026 08:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

சித்ரதுர்கா மாவட்டத்தின் மூன்று மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கில், சந்திரவல்லி குகை உள்ளது. இது, வரலாற்று சிறப்பு மிக்க, சித்ரதுர்கா கோட்டைக்கு அருகே உள்ளது. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் உள்ளன. இப்பகுதியை சுற்றிப்பார்க்க அனுமதி உண்டு. காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை அனுமதி உண்டு.

குகைக்குள் மின் விளக்குகள் கிடையாது என்பதால், டார்ச் லைட் எடுத்து செல்வது அவசியம். அது போல, வழிகாட்டியின் துணையுடன் மட்டுமே குகைக்குள் செல்ல, சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.

கி.பி., 4ம் நுாற்றாண்டில் பல்லவர்களுடன் நடந்த போரில் தோல்வி அடைந்த கடம்ப வம்சத்து அரசன் மயூரசர்மன் தஞ்சம் அடைவதற்காக, 80 அடி ஆழத்தில் சந்திரவல்லி குகையில் பல மாறுபாடுகளை செய்தார். அவர், சில ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்து, பின் உயிரிழந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த குகையை, இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறது. குகைக்குள் பூஜை அறை, தியான அறை, மன்னர் உட்காரக்கூடிய சிம்மாசனம், ரகசிய ஆலோசனை கூடம், பாறைகளின் மீது செய்யப்பட்ட படுக்கைகள், நீர்த்தொட்டி ஆகியவற்றை பார்க்கலாம்.

இதை பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கும். 80 அடி ஆழத்தில் உள்ள குகையாக இருந்தாலும் வெளிப்புறத்திலும் காற்றும் வரும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

குகையின் பல இடங்களில் இயற்கை வண்ணச் சுவரோவியங்கள் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இந்த ஓவியங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என தோன்றும்.

அதுமட்டுமின்றி குகையின் நடுப்பகுதியில் சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை துறவிகள், மன்னர் குடும்பத்தினர் வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த குகையில் மர்மமான சுரங்கப்பாதைகளும் உள்ளன.

இந்த குகைக்கள் சில இடங்களில் குனிந்த படியே செல்ல வேண்டியிருக்கும். அதனால், முதியவர்கள், ஆஸ்துமா, மூச்சு விடுதலில் பிரச்னை உடையவர்கள் செல்வதை தவிர்க்கலாம்.

இது, மற்ற சுற்றுலா இடங்களை போல இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும். நிறைய வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

எப்படி செல்வது?


பஸ்: பெங்களூரிலிருந்து, 220 கி.மீ., தொலைவில் சித்ரதுர்கா உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பஸ் மூலம், சித்ரதுர்கா கோட்டையை அடையலாம். அங்கிருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள சந்திரவல்லி குகையை ஆட்டோவில் சென்றடையலாம். இந்த இடத்திற்கு பஸ்சில் வருவதே சிறந்தது. ரயிலில் வருவது நேரம், பணத்தை விரயமாக்கும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us