/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கு 11 பேர் மீது குற்றப்பத்திரிகை
/
சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கு 11 பேர் மீது குற்றப்பத்திரிகை
சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கு 11 பேர் மீது குற்றப்பத்திரிகை
சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கு 11 பேர் மீது குற்றப்பத்திரிகை
ADDED : நவ 01, 2025 04:24 AM

மங்களூரு: பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கில் 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடாவின் பன்ட்வாலை சேர்ந்த பஜ்ரங் தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி. இவர், கடந்த மே 1ம் தேதி மங்களூரு பஜ்பே பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது.
மங்களூரு, சிக்கமகளூரை சேர்ந்த அப்துல் சப்வான், நியாஸ், முகமது, நவுசாத், ஆதில், கலந்தர் ஷபி, நாகராஜ், ரஞ்சித், முகமது ரிஸ்வான், அசாருதீன், அப்துல் காதர் ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சுகாஸ் கொலை தொடர்பாக, பெங்களூரு என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் 1,000 பக்க குற்றப்பத்திரிகை நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
'சமூகத்தில் அச்சுறுத்தல் ஏற்படுத்தவும், பயங்கரவாதத்தை பரப்பும் நோக்கிலும், சுகாஸ் கொலை நடந்துள்ளது. தடைசெய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அப்துல் சப்வான், ஆதில் ஆகியோருக்கும், சுகாஷுக்கும் இருந்த பழைய பகை கொலைக்கு முக்கிய காரணம்.
'சுகாஸை கொலை செய்ய கூலிப்படைக்கு பணம் கொடுத்தது, ஆதில்' என, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

