sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 செக் போஸ்ட்

/

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : டிச 30, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எப்போது நிறைவேறும்?

த ற்போதைய மாநில மந்திரியான 'மாஜி' கைக்கார செங்கோட்டைக்காரர் ரயில்வே இணைய அமைச்சராகவும் இருந்தாரு. அவரது காலத்தில் முடிவடையாமல் போன, குப்பம் -- மா. குப்பம், பணிகள், 30 ஆண்டுகளாகியும் நிலுவையில் தான் தொடருது. இப்போது, பூக்கார மாநிலத்துக்காரரும் அதே பதவியில் இருக்காரு. துரித வேலைக்கு விரிவான செயல் திட்டத்தை முடுக்கி விடுவாரா அல்லது மீண்டும் முடக்கமாக்கிடுவாரா.

மத்திய பூக்காரர் ஆட்சியில் தான், தென்மேற்கு ரயில்வே பணிகள் மெச்சும்படி இருப்பதாக அந்த கட்சிக்காரங்க பெருமையா பேசுறாங்க.

கோலார் டூ ஒயிட் பீல்டுக்கு நேரடி ரயில் பாதை ஏற்படுத்த புல்லுக்கட்டு செங்கோட்டையில் குரல் கொடுத்தாரு. இந்த திட்டம் நிறைவேற எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேணுமோ. கோலார் என்றாலே கோளாறு என நினைக்கிறாங்களோ.

வேலை வந்தாச்சு!

கோ ல்ப் சங்கத்துக்காரங்களுக்கு எதிர்ப்பு மேல் எதிர்ப்பு கூடிக்கொண்டே போவதால் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ள போறதா பேசிக்கிறாங்க. அந்த 'ராயல்' விளையாட்டுக்காரங்க பிறருடன் மோதுவதை தவிர்க்க, விட்டு கொடுக்க அவங்க வட்டாரத்தில் ஆழமா யோசிச்சிட்டாங்க. இவங்களுக்கு பக்கபலமாக உதவிட எந்த கட்சியும் துணைக்கு வரலயாம். எதுக்கு வீண் வம்பு என்ற முடிவுடன் இருப்பதாக சொல்றாங்க.

மாநிலத்தில் வெறுப்பு பேச்சுக்கு தடை மசோதா நிறைவேறியுள்ள நேரத்தில், வீடு புகுந்து தாக்குவோம்னு ஒரு 'மாஜி' கவுன்சிலர் உட்பட சிலர் கீழ்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்காங்க. காக்கிகள் சிட்டியில் வன்முறையை தடுக்க தாமாகவே முன் வந்து வழக்கு பதிவு செய்து அடக்குவாங்களா அல்லது வன்முறை வளர வேடிக்கை பார்ப்பாங்களா.

வன்முறையை துாண்டும் செய்திகளை பரப்புகிற வாட்ஸாப் செய்தியாளர்களையும் அடக்க சரியான தருணம் வந்திருக்கு. இது காக்கிகள் பார்வையில் தென்படலையோ.

மறுவாழ்வு நிதி கொள்ளை?

பி ச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக சூ.பாளையத்தில் சமுதாய பவன் கட்டடம் பயன்படுத்தினாங்க. அங்கு கட்டில், படுக்கை, டி.வி., கழிப்பறை, குளியலறை, மூன்று வேளை சாப்பாடு இதனுடன் பராமரிப்பாளருக்கு சம்பளம் என சகல வசதியோடு முனிசி.,யில் ஏற்பாடுகள் செய்தாங்க. இதற்காக பட்ஜெட்டிலும் பணம் ஒதுக்கினாங்க.

பராமரிப்பு பொறுப்பு ஏற்றவருக்கு ஒரு வருஷமா 'பட்டுவாடா' செய்யாததால் இந்த வேலையே வேணாம்னு ஒதுங்கிட்டாராம். அத்தோட அந்த மறுவாழ்வு மையம் கேட்பாரற்று மூடி கிடக்குது. பழையபடி வீடற்ற பிச்சைக்காரர்கள் பஸ் நிலையம், ரயில் நிலையம், கடைகளின் தாழ்வாரத்தில் படுத்து தூங்குறாங்க. பிச்சைக்காரங்களுக்கான மறுவாழ்வு நிதியை விழுங்கலாமா.

வீணாக்குவதில் மன்னர்கள்!

ரா .பேட்டையில் 20 ஆண்டுக்கு முன், அரசுக்கு சொந்தமான பஸ் நிலையம் பல 'எல்' செலவுல எதுக்காக கட்டினாங்களோ, அந்த நிலையத்தை பயன்படுத்தவில்லை. அரசு பணத்தை தாராளமாக செலவழித்து கட்டடங்களை கட்டுறாங்களே தவிர, அதனை பயன் படுத்தாமல் வீணாக்குவதே வழக்கமா போச்சு.

சாம்பியன் பகுதியில் நுாற்றாண்டு பழமையான பள்ளியின் பக்கத்தில் பஸ் நிழற்குடை, சமுதாய பவன் கட்டினாங்க. ஆ.பேட்டையில் பஸ் நிலையம் ஏற்படுத்தினாங்க. 'நோ யூஸ்'. 35 வார்டில் பல கோடி செலவழித்து 40 கழிப்பறைகளை கட்டி பூட்டு போட்டிருக்காங்க.

பல கோடி ரூபாய் செலவில் 30 பூங்காக்கள் ஏற்படுத்தி விஷ ஜந்துக்கள் நடமாட விட்டிருக்காங்க. அரசு பணத்தை எப்படி எல்லாம் வீணாக்கலாம் என்பதற்கு கோல்டு சிட்டியின் முனிசி.,தான்






      Dinamalar
      Follow us