தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : பிப் 14, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தெரு பூஜைக்கு மந்திரி?

ம ந்திரி மனசை குளிரூட்ட கோல்டு நகரின் இதய பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூஜை செய்ய வைத்தாங்க.

'கை'யில் அதிகாரம் இருப்பதால் சுயநலனுக்காக அரசு சொத்துகளை இடிக்கலாம், உடைக்கலாம்னு பல கோடியை பாழாக்கிட சட்டத்தையே முந்தானையில் முடிச்சி போட்டுக்கலாமான்னு எதிர்க் கட்சிங்க கேள்விகள் எழுப்பவில்லை. கோல்டு சிட்டியில் அப்படியொரு எதிர்க் கட்சி இருப்பதாகவும் தெரியவில்லை.

மாறாக, கை கட்சிக்குள் உள்ள விபரம் அறிந்த, மேலிட தொடர்பில் இருக்கிறவங்களே புகாராக புட்டு புட்டு வெச்சாங்க. உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு வர வெச்சிட்டாங்க. ஆனால், அதே இடத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை போட மந்திரியை வரவழைச்சாங்க.

கடைசியாக, அந்த மந்திரியை, கழிவுநீர் கால்வாய்க்கும், தெரு சாலை அமைக்கவும் பூமி பூஜை போட வெச்சிட்டாங்களே. உயர் மட்ட விசாரணையில் சிக்க போவது ஆபீசரு தானே தவிர, துாண்டிவிட்ட அரசியல்வாதி இல்லை.

இதுக்கு போய் அலட்டிக்கலாமா?

கோ ல்டு சிட்டியில் பல வண்ண கட்சி கொடிகளுக்கு குறையே கிடையாது. இவைகளை தேர்தல் நேரத்தில் மட்டுமே பார்க்கலாம். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்னைகளில் தேடினாலும் இந்த கொடிக்காரங்க இருக்கும் இடம் தெரிவதே இல்லை.

கோல்டு சிட்டி நகரின் வாழ்வாதாரத்துக்கு நம்பி இருப்பது ரயில் பயணம். அந்த போக்குவரத்து வசதிக்கும் அவதியாகி விட்டது.

ரயில் நேரம் மாற்றப் பட்டதாக பெருசா சாதனையென சிலர் கூப்பாடு போட்டாங்க. ஊடகங்களில் பெரிசா சாதனையென மமதை காட்டினாங்க.

ஆனால், ஒயிட் பீல்டில் இருந்து இயக்கிய ரயிலை கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்தில் இருந்து இயக்கவும் இல்லை. பிருந்தாவன் ரயில் ப.பேட்டை வரும் முன்பே மாரிகுப்பம் செல்லும் இணைப்புக்கு மெமு ரயிலும் இல்லாமல் போய்விட்டது.

எது சாதனையென தெரியலையே. இதுக்கு போய் அலட்டிக்கலாமா.

ரயில் வசதிக்காக செங்கோட்டைக்காரர் கடிதம் எழுதியும் பயன் இல்லை. அசெம்பிளி காரர் பெரிய ஆபீசரை நேரில் அணுகியும் பிரயோஜனம் இல்லை. சம்பந்தப்பட்ட மந்திரியிடம் முறையிட்டும் செவிடன் காதில் விழுந்த சங்காகவே உள்ளதே.

பாக்கி தள்ளுபடி என்ன ஆகும்?

மா ர்க்கெட் கடைகளுக்கு வாடகை கட்டணம் செலுத்தாததால், அபராதம் பேரில் கூட்டு வட்டியாக ஒவ்வொரு கடைக்கும் பல மடங்கு விதித்திருக்காங்க. இந்த வட்டியை தள்ளுபடி செய்ய வேணும்னு வியாபாரிங்க கேட்கிறாங்க. ஆனால், இதற்கு கோல்டு சிட்டிக்கு வந்த மந்திரியோட பதிலை காணோம்.

எப்படியேனும், எல்லா கடைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்த உள்ளுக்குள் அதிகார வேலை நடக்கிறது. புதுப்பித்தல் பேரில் கடைகளை இடிக்கும் சம்பவமும் தயாராகிறது.

இது தொடர்பாக வட்டியை தள்ளுபடி செய்யுமாறு முதல்வர் கவனத்திற்கு போயிருக்கிறது. ஆனால் அது மதில் மேல் பூனையாக இருப்பதாக அச்சம் அலைபாயுது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us