தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : பிப் 21, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 04:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எப்போ தான் முடியுமோ

இந்த ரயில் பாதை பணி

தொ ழில் நுட்பமே இல்லாத காலத்தில், 10 ஆயிரம் அடி பாதாள சுரங்கம் தோண்டின வரலாறு கோல்டு சிட்டிக்கு உள்ளது. ஆனால், குப்பம், -மாரிகுப்பம் வரை, 21 கி.மீ., நீளத்திற்கு, இணைப்பு ரயில் பாதையை அமைக்கும் பணி, 25 ஆண்டுகளாகியும் முடிந்த பாடில்லை. ஆமையை போல, மெல்ல மெல்ல இந்த பணியை நடத்துறாங்க. மத்திய அரசின் பட்ஜெட்டில் பல நுாறு கோடி நிதி ஒதுக்கியும், எதுக்கு தாமதமாககிறதோ தெரியல. அந்த தொகை போதலையா, கமிஷன் தொல்லைகள் ஓயலயா.

இன்னும் எவ்வளவு காலம் தான் வேலை நிறைவடைய காத்திருக்க வேண்டுமோ.

கைவிட்டு போன

தொழிற்சாலை

கா லி நிலம் பல ஆயிரம் ஏக்கரும், போதிய பாதுகாப்பு வசதிகளும் தாராளமாக இருக்கும் போது, ஹெலிகாப்டர் பேக்டரி, வேம்கல் தொழிற்பேட்டைக்கு எப்படி மாறியது.

கோல்டு சிட்டியில் சுரங்கத்தை மூடின பிறகு, வேலை வாய்ப்புக்காக ஊரை விட்டு ஊரு, நகரம் விட்டு நகரம், மாநிலம் விட்டு மாநிலம் என, மக்கள் வேலையை தேடி ஓடிக் கொண்டே இருக்காங்க. ஆனால், புல்லுக்கட்டு செங்கோட்டைக்காரருக்கு, கோல்டு சிட்டியில் ஜனங்க ஓட்டு போடல என்பதால், வேம்கலுக்கு இடம் பெயர்ச்சி ஆனதான்னு யூத்கள் மத்தியில் ரீல் ஓடிக் கொண்டிருக்குது.

கோல்டு சிட்டியில் எல்லா அடிப்படை வசதிகள் இருந்தும், அரசியல் சடுகுடு காரணங்களால், சிறப்புக்குரிய லிட்டில் இங்கிலாந்தை சிதைக்கிறதா சொல்றாங்க. இது, நிஜம் தானா.

தொழிற் பூங்கா வருது வருதுன்னு சொல்றது மட்டுமே தேய்ந்த ரிக்கார்டாக இருக்குதே

கழிப்பறைக்கு பல கோடி வீண்

கோ ர்ட்டுக்குள் கட்டப்பட வேண்டிய கழிப்பறை கட்டடத்தை, மினி விதான் சவுதாவுக்குள் இடம் பெற செய்திட்டாங்க. ஆனால், கோர்ட்டில் கழிப்பறை இல்லாததால் பொதுமக்கள் அதிலும் பெண்கள் அல்லல் படுறாங்க. அந்த மினி விதான் சவுதாவில், கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ரெண்டு மூன்று வருஷம் கடந்தும், அந்த நவீன கழிப்பறையை, ஜனங்க பயன்பாட்டுக்கு திறக்கல. எந்த வி.ஐ.பி. வந்து திறக்க வேண்டுமோ.

இதுமட்டுமல்ல, கோல்டு சிட்டியில், 50கும் மேற்பட்ட நவீன கழிப்பறைகள் கட்டினாங்க. அவைகளை பூட்டியே வைத்திருக்காங்க. அவைகள் சிதிலமடைகின்றன. மக்கள் வரி பணமோ, பலக்கோடி ரூபாய் கரைகிறது. கழிப்பறை கட்டடங்களுக்கு மட்டுமே பணம் பட்டுவாடா ஒழுங்கா போய் சேர்ந்திருக்குது. இதில் கணக்கா கமிஷன் துட்டும் விஐபிகளின் வீட்டு கதவை தட்டி ஒப்படைக்கபட்டிருக்குது.

கழிப்பறை வசதி இல்லாததால், திறந்த வெளிக்கு செல்ல ஜனங்க இருட்டு வரும் வரை காத்திருக்காங்க.

மாயமான கருவிகள்?

நு ாறாண்டு பழமைவாய்ந்த மைன்ஸ் கம்பெனி மருத்துவமனையில் தான், நாட்டில் முதல், 'எக்ஸ் ரே' கருவியை அறிமுகப்படுத்தினாங்க. அதனை பயன் படுத்தி, தொழிலாளர்களின் நுரையீரல் பொத்தல்களை கண்டறிந்தாங்க. அது இருக்குதா; செயல் இழந்து போனதா அல்லது அபேஸ் ஆனதா.

இதுமட்டுமில்ல... ஆபரேஷன் தியேட்டருக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து பயன்படுத்தினாங்க. அது என்னானதோ.

சுரங்க தொழிலை மூடின பின், இந்த கம்பெனியின் மருத்துவமனைக்கும் கல்லறை எழுப்பிட்டாங்க. அதிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை, கருவிகளை யார் சுருட்டிட்டாங்களோ. 26 ஆண்டுகளில் துருபிடித்து பயனற்று போனதாக கணக்கில் எழுதிட்டாங்க போல.

வளமான சந்தன மரங்கள், தேக்கு மரங்கள் எப்படி தான் மாயமானதோ. எல்லாமே மருத்துவ வி.ஐ.பி.,களின் திரு(ட்டு)விளையாடல் தான்னு வட்டார தகவல்கள் தெரிவிக்குது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us