sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : மார் 27, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அதிகாரிகள் படம் எதுக்காக?

மு னிசி., ஆபீஸ் எதிரில் 20 நாட்களுக்கு மேலாக தொழிலாளர் சங்கத்தின் பேனர் அகற்றப்படாமல் வைத்திருந்தாங்க. அதனை யூடியூப் வீடியோவில் படம் பிடித்து காட்டி, இது நியாயமான்னு கேள்வி கேட்டதாலே அகற்றினாங்க.

ஆனால், அந்த பேனர்களில் தொழிலாளர் படங்கள் இருந்துட்டு போகட்டும்; ஆனால், ஆபீசர்கள் படங்களும் இருந்ததே இதுக்கு என்ன பதில் சொல்வாங்க.

தொழிலாளிங்க பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்துறது வழக்கமே. பேனர்களில் ஆபீசருங்க படங்களும் இருப்பதால், ஆபீசர்களும் போராடுவதாக அர்த்தமாகாதா. ஆபீசர்கள் தான் போராட்டங்களை துாண்டுவதாக புரிந்துக் கொள்ளணுமா.

ஸ்டேட் தொழிற்சங்க தலைவர் வந்ததால், அவரை வரவேற்கும் பேனர்களில் ஆபீசர்கள் படமும் இருப்பதை அரசு ஏற்றுக் கொள்ளுமா.

நோ ட்ரீட்மென்ட்

அ ரசு மருத்துவமனை யில் ஒரு வயதுக்கு உட்பட்ட பச்சிளங் குழந்தைகளுக்கு எந்த விதமான மருந்துகளும் இல்லை என்கிறாங்க. டாக்டர்கள் சீட்டு எழுதி கொடுத்து மெடிக்கல் ஷாப்புகளில் வாங்கிக்க சொல்றாங்க. இதுல ரகசிய உள் ஒப்பந்தம் இருக்குதான்னு சந்தேகம் ஏற்படுது.

அரசு மருத்துவமனை என்பது, ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு 'நோ ட்ரீட்மென்ட்' அல்லது 'நோ மெடீசன்' என்று வெளிப்படையாக அறிவிப்பு பலகை வைக்கலாமே.

ஏற்கனவே, அரசு மருத்துவமனையில் பலவிதமான குறைபாடுகள் இருப்பதாக சொல்றாங்க. அதில் குழந்தைகள் சிகிச்சைக்கும் கொடுமையா இருக்குதென ஏழை குடும்பத்தினர் வருந்துறாங்க.

மருத்துவமனை கட்டடம் மட்டுமே மகத்தான சாதனையென மக்கள் தலைவர்கள் கூப்பாடு போடுறாங்களே.

ஐ.சி.யு., பிரிவு பற்றி கொஞ்சமாவது கவனம் செலுத்த வேணாமா. செயல்பாட்டுக்கு எப்போ வருமோ.

எப்போ சொந்தமோ?

செ ங்கோட்டை தேர்தல் நெருங்கின போது, பூ கட்சியின் சென்ட்ரல் மைன்ஸ் மினிஸ்டரை வரவழைச்சாங்க. 3,200 பேருக்கு 'பட்டா' தருவதாக அழைச்சாங்க. நள்ளிரவு வரை 900 பேருக்கு மட்டுமே பொசிஷன் சர்ட்டிபிகேட் கொடுத்தாங்க. மத்தவங்கள மறந்துட்டாங்க.

தேர்தல் வந்ததாலே கூட்டணி சகவாசத்தில் மறுபடியும் பூக்காரருக்கு அவகாசம் தர மறந்துட்டாங்க. கழித்தல் கணக்கில் சேர்த்தாங்க. மைன்ஸ் பகுதியில் 20,000 வீடுகள் இருப்பதாக சொல்றாங்க. இதில் 80 சதவீதம் வீடுகள் ஆதாரமற்றவை என்கிறாங்க.

நாட்டில் யாருமே வீடற்றவர்களாக இருக்க கூடாதென மத்திய, மாநில அரசுகள் பல கோடியில் திட்டம் அமல் படுத்துறாங்க. ஆனால் கோல்டு சிட்டி மைன்ஸ் பகுதி வீடுகள் எப்போ சொந்தம் ஆகப்போகுதோ. இதுக்குள்ள இருக்கும் குறுக்கீடு என்னவோ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us