தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : ஏப் 07, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடி பறக்குமா?

' தே சிய கட்சி' என்ற ஒரு லெட்டர் பேடு கட்சிக்கு, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிற விஷயமே தெரியலயோ.

நல்ல துாக்கத்தில் இருக்கிற இவங்களுக்கு, இப்படி ஒரு தேர்தல் நடக்கும் விஷயத்தை யாரும் சொல்லவே இல்லையா. அவங்க புளு கொடி, கோல்டு சிட்டியில் மட்டுமே பறந்தால் போதும் என்று இருக்காங்களா. அப்படின்னா, இனி தேசிய கட்சி என்பதை, 'லோக்கல் கட்சி'ன்னு பேர் சூட்டிக்கலாமே. ஒரு காலத்தில மத்திய சட்ட அமைச்சர், கவர்னர் பதவி எல்லாம் பெற்ற இந்த கட்சி, இப்படி சுருங்கிப் போச்சே. லோக்கல் முனிசி., தேர்தலிலாவது போட்டியிட இவங்க எழுவாங்களான்னு கோல்டு சிட்டியில சிலர் கேட்கிறாங்க.

மைன்ஸ் டூர் ஏன்?

டி ல்லியில் இருந்து கோல்ட் சிட்டிக்கு, 30 எம்.பி.,க்கள் குழுவினர் ரகசியமா வந்து போயிருக்காங்க. அதுல, 'உறவுக்கு கைகொடுப்போம்... உரிமைக்கு குரல் கொடுப்போம்'னு... பேசுற சூரியன் கட்சிக்காரரும், 'உலக தொழிலாளர்களே... ஒன்று சேருங்க'ன்னு கோஷமிடும் சிகப்பு கொடிக்கார எம்.பி.,க்களும் வந்திருக்காங்க. ஆனால், கோல்டு சிட்டியில் இருக்கிற இவங்க கட்சிக்காரங்களுக்கு எந்த தகவலும் இவங்க கொடுக்கல.

இவங்களோட, 'மைன்ஸ் டூர்' பல சந்தேகங்களை எழுப்பி இருக்கு. மைன்சுக்குள் தண்ணீர் நிரம்பி வெளியேறி வருது. இதனால், கோல்டு எடுக்க முடியாதுன்னு வந்து சென்ற குழு, நேஷனல் கேபிடல் சிட்டிக்கு அறிக்கை தாக்கல் செய்தாங்கன்னு அந்த வட்டார தகவல்கள் தெரிவிக்குது.

சைனாட் மண்ணில் இருந்து கோல்டு எடுக்க சாத்தியம் இருக்கா. மைன்ஸ் உள்ள சொந்த மாநிலத்துக்காரங்க சுரங்க தொழிலையே மூடின காலத்திலும், மூடின பிறகும் யாருமே இந்த வளம் பற்றி நலம் விசாரித்ததா தெரியலையே.

மரம் வெட்டுவது யார்?

கா க்கி பயிற்சி நிறுவனம், 100 ஏக்கரில் அமைக்க ஏற்பாடுகள் நடக்குது. அங்குள்ள மரங்களை டெண்டர் விடாமல் யாரோட தைரியத்தில் வெட்டி எடுக்குறாங்க. இது, சட்ட மீறல் ஆகாதா என, காக்கி வட்டார ஆட்களே பேசிக்கிறாங்க.

மாவட்ட உயர் அதிகாரிங்க கவனத்திற்கு போகலையா. இதன் பின்னணியில் அரசியல் 'தலை'கள் இருப்பதால் கிடைத்ததை சுருட்டும் வேலை ஒரு சிலருக்கு சுலபமா நடக்குதாமே.

கோல்டு சிட்டி பெரிய காக்கி ஆபீசர் எதிலும் வெளிப்படையை விரும்புற நேர்மைவாதின்னு பேரு இருந்தாலும், டெண்டர் இல்லாமல் மரங்களை வெட்ட அனுமதிக்கலாமா.

ஆரூடம் பார்ப்பதா?

தெ ருநாய்களுக்கு உணவளிக்க, வார்டுக்கு ஒரு இடத்தை ப.பேட்டை, கோலார் முனிசி., நிர்வாகம் ஏற்பாடு செய்து வாராங்க. முல்பாகல், மாலுாரிலும் இப்பணி நடக்குது. ஆனால், தங்கமான நகரத்தில் ஆபீசர்கள் கண்டுக்கவே இல்லை. எல்லா தெருக்களிலுமே தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுவரையில் கணக்கெடுப்பு நடத்தவில்லை.

சாலைகளில் பயந்து பயந்து செல்ல வேண்டி உள்ளது. தெருநாய்கள் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த முனிசி., யில் பல, 'எல்' பட்டுவாடா செய்றாங்களே தவிர, ஆப்பரேஷன் நடந்ததா தெரியலயே. தெருநாய்களின் பிரியர்கள், மக்கள் நடமாடுகிற இடத்தில் தான் உணவு அளிக்கிறாங்க. உணவு வழங்க, இடம் தேர்வு செய்ய ஆரூடம், வாஸ்து சாஸ்திரம் பார்க்குறாங்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us