UPDATED : நவ 24, 2026 12:00 AM
ADDED : நவ 23, 2026 10:00 PM
தங்கவயல்: தங்கவயலில் சிறுத்தை நடமாட்டத்தால் பீதி ஏற்பட்டுள்ளது.
சாம்பியன் ரீப் ஆயுதப்படை போலீஸ் நிலைய குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம் மாலையில் சிறுத்தை நடமாடியதாக சிலர் தெரிவித்துள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார், வனத்துறைக்கு தகவல் கொ டுத்துள்ளனர். இதையடுத்து இரு துறையினரும் இணைந்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சாம்பியன் அருகே உலகமதி பகுதியில் காட்டுப் பன்றிகள், பல வகையான பாம்புகள் உட்பட வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிகம் பகுதியில் உள்ள தொற்று நோய் மருத்துவமனை என்ற ஈ.டி., மருத்துவமனை வளாகத்தில் இருந்து பாம்புகள் வெளியேறி அருகிலுள்ள சிவராஜ் நகரின் வீடுகளில் புகுந்து விடுகின்றன.
இதனால் அப்பகுதியினர் பீதியில் உள்ளனர்.
