/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யஷ்வந்த்பூர் யார்டில் பராமரிப்பு பணி சென்னை, புதுச்சேரி ரயில்கள் ரத்து
/
யஷ்வந்த்பூர் யார்டில் பராமரிப்பு பணி சென்னை, புதுச்சேரி ரயில்கள் ரத்து
யஷ்வந்த்பூர் யார்டில் பராமரிப்பு பணி சென்னை, புதுச்சேரி ரயில்கள் ரத்து
யஷ்வந்த்பூர் யார்டில் பராமரிப்பு பணி சென்னை, புதுச்சேரி ரயில்கள் ரத்து
ADDED : மார் 18, 2025 04:57 AM
பெங்களூரு: 'யஷ்வந்த்பூர் யார்டில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ஏப்., 3 முதல் 11 வரை எட்டு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரயில் எண் 12291: யஷ்வந்த்பூர் - சென்னை சென்ட்ரல் ரயில் ஏப்ரல் 4ம் தேதியும்; எண் 12292: சென்னை சென்ட்ரல் - யஷ்வந்த்பூர் ரயில், ஏப்., 5ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.
ரயில் எண் 16573: யஷ்வந்த்பூர் - புதுச்சேரி விரைவு ரயில், ஏப். 4ம் தேதியும்; 16574: புதுச்சேரி - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், ஏப்., 5ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.
ரயில் எண் 16577: யஷ்வந்த்பூர் - பீதர் விரைவு ரயில் ஏப்., 5ம் தேதியும்; எண் 16578: பீதர் - யஷ்வந்த்பூர் விரைவு ரயில் ஏப்., 6ம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.
ரயில் எண் 16541: யஷ்வந்த்பூர் - மஹாராஷ்டிராவின் பந்தர்புரா விரைவு ரயில் ஏப்., 3, 10ம் தேதியும்; எண் 16542: பந்தர்புரா - யஷ்வந்த்பூர் விரைவு ரயில், ஏப்., 4, 11 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.
வழித்தடம் மாற்றம் - இடை நிறுத்தம்
ரயில் எண்கள் 16511 / 16512 கே.எஸ்.ஆர்., பெங்களூரு - கண்ணுார் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு விரைவு ரயில், ஏப்ரல் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை, பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா முனையத்தில் நிறுத்தப்படும்; அங்கிருந்து தான் புறப்பட்டுச் செல்லும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.