ADDED : செப் 13, 2026 11:17 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு, முதல்வர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, மாநில மக்களுக்கு அரசு சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் எனது வாழ்த்துகள். கிரஹஜோதி, கிரஹலட்சுமி திட்டங்கள் மூலம், மாநிலத்தில் உள்ள வீடுகள் ஒளிரூட்டப்படுகின்றன. இந்த ஒளியில் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுங்கள். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தம் நிரம்பட்டும்.
விக்ன விநாயகர் ஆசீர்வாதங்களை பெற்று, மக்களின் துன்பங்களை போக்கி, மகிழ்ச்சி, அமைதியை கொண்டு வரட்டும். விநாயகருக்கு முன் நாம் கவுரியை வழிபடுகிறோம். கவுரிக்கு நிகரான அனைத்து பெண்களுக்கும் இனிய பண்டிகை வாழ்த்துகள்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
