ADDED : செப் 26, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க, நாளை முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் ஹரிபிரசாத் ஆகியோர் டில்லி செல்கின்றனர்.
டில்லியில் செப்., 29ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி மாநில தலைவர் ஹரிபிரசாத், முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளை, இம்மூவரும் டில்லி செல்ல உள்ளனர். அப்போது, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொது செயலர் வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலாவுடன் பேச உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் கார்ப்பரேஷன் வாரியங்கள் நியமனம், கட்சி அமைப்பு, உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
