/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வரின் குடும்பத்தினர் சாமுண்டீஸ்வரி தரிசனம்
/
முதல்வரின் குடும்பத்தினர் சாமுண்டீஸ்வரி தரிசனம்
ADDED : ஜூலை 18, 2025 11:34 PM
மைசூரு சாமுண்டி மலையின், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கன்னட ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில், பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.
நான்காம் வெள்ளிக்கிழமையான நேற்று, முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, மருமகள் ஸ்மிதா ராகேஷ் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்தனர். இவர்கள் பின்வாசல் வழியாக வந்து, அதே வழியாக திரும்பினர். முதல்வரின் மனைவியையும், மருமகளையும் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
அதேபோன்று, மத்திய அமைச்சர் ஷோபாவும் பாத யாத்திரையாக படிகள் வழியாக ஏறி சென்று, சாமுண்டீஸ்வரியை தரிசித்தார்.
நேற்று அதிகாலை 4:30 மணியில் இருந்தே, பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்தனர்.