/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வரவேற்பு இல்லாத 'அன்பு தொட்டில்' குப்பை தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகள்
/
வரவேற்பு இல்லாத 'அன்பு தொட்டில்' குப்பை தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகள்
வரவேற்பு இல்லாத 'அன்பு தொட்டில்' குப்பை தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகள்
வரவேற்பு இல்லாத 'அன்பு தொட்டில்' குப்பை தொட்டிகளில் வீசப்படும் குழந்தைகள்
ADDED : நவ 12, 2025 09:56 PM
பெங்களூரு: 'குழந்தைகளை குப்பை தொட்டியில் போடுவதற்கு பதிலாக, அன்பு தொட்டிலில் போடுங்கள்' என, பெங்களூரு நகர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பலாத்காரத்துக்கு ஆளாகியோ, விருப்பமின்றி கருவுறும் இளம்பெண்கள், தங்களுக்கு பிறக்கும் குழந்தையை குப்பை தொட்டியிலோ, சாக்கடையிலோ வீசி எறியும் சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. இதை தடுக்கும் நோக்கில், பெங்களூரு நகர் மாவட்ட குழந்தைகள் பிரிவு, மகளிர், குழந்தைகள் நலத்துறை ஒருங்கிணைப்பில், கடந்தாண்டு 'அன்பு தொட்டில்' என்ற திட்டம் துவக்கப்பட்டது.
'அன்பு தொட்டில்' திட்டம் துவங்கி, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இது வரை ஒரே ஒரு குழந்தை மட்டுமே தொட்டிலுக்கு வந்தது. ஆனால் குப்பையிலும், சாக்கடையிலும் குழந்தைகளை வீசுவது நிற்கவில்லை.
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
பச்சிளம் குழந்தைகளின் உயிருக்கு அபாயம் ஏற்பட கூடாது. சாக்கடையிலும், புதரிலும் குழந்தைகளை வீசுவது வருத்தம் அளிக்கிறது. 'அன்பு தொட்டில்' திட்டத்தில் பெறப்படும் குழந்தைகளை பராமரித்து, குழந்தையில்லா தம்பதிக்கு தத்துக் கொடுப்பது, திட்டத்தின் நோக்கம்.
இதனால் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமையும். எனவே தேவையின்றி பிறக்கும் குழந்தைகளை சாக்கடை, குப்பையில் போடுவதற்கு பதிலாக, அன்பு தொட்டியில் போடுங்கள்.
பெங்களூரின் கிழக்கு மண்டலத்தின், ஏழு இடங்களில் அன்பு தொட்டில் வைக்கப்பட்டுள்ளன. சி.வி.ராமன் பொது மருத்துவமனை, வர்துார், ஆவலஹள்ளியின் ஆரம்ப சுகாதார மையங்கள், செயின்ட் மைக்கேல்ஸ் ஹோம் கான்வென்ட் உட்பட, ஏழு இடங்களில் தொட்டில்கள் உள்ளன.
தொட்டிலில் குழந்தை போட முடியாத தாய்மார்கள், 1098 அல்லது 112 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் பற்றிய தகவல்களை, ரகசியமாக வைத்திருக்கப்படும்.
நாங்கள் குழந்தையை தத்துக் கொடுப்பதை விட, குழந்தைகளின் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

