/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஐ லவ் முகமது' முழக்கத்தால் மோதல்: பெலகாவி கிராமத்தில் போலீஸ் குவிப்பு
/
'ஐ லவ் முகமது' முழக்கத்தால் மோதல்: பெலகாவி கிராமத்தில் போலீஸ் குவிப்பு
'ஐ லவ் முகமது' முழக்கத்தால் மோதல்: பெலகாவி கிராமத்தில் போலீஸ் குவிப்பு
'ஐ லவ் முகமது' முழக்கத்தால் மோதல்: பெலகாவி கிராமத்தில் போலீஸ் குவிப்பு
ADDED : அக் 05, 2025 04:00 AM

பெலகாவி: பெலகாவியில் 'ஐ லவ் முகமது' முழக்கத்தால் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.
பெலகாவி மாவட்டம், கடாக் ஹள்ளி கிராமத்தில் உள்ளது, மெஹபூப் சுபானி தர்கா. இந்த தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடத்தப்படும். இத்திருவிழாவின்போது முஸ்லிம்கள் ஊர்வலமாக செல்வர். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, குறிப்பிட்ட பகுதியில் ஊர்வலம் சென்றபோது, சில முஸ்லிம் இளைஞர்கள், 'ஐ லவ் முகமது' என, முழக்கம் எழுப்பினர். இதைக் கேட்ட மற்றொரு சமூகத்தினர், 'கோஷம் எழுப்ப கூடாது' என்றனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், கற்களை வீசித் தாக்கினர். இதனால் அந்த சமூகத்தினரின் வீடு, வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக, அவர்களும் கற்களை வீசித் தாக்கினர். இதனால் கிராமம் முழுதும் பதற்றம் நிலவியது.
இதையறிந்த போலீஸ் கமிஷனர் பூஷன் போரஸ், சம்பவ இடத்திற்கு போலீஸ் படையுடன் விரைந்தார். இரவு முழுதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கல்வீசி தாக்குதல் நடத்துவது நிறுத்தப்பட்டது.
இருப்பினும், கர்நாடக ரிசர்வ் போலீசார், கிராமம் முழுதும் குவிக்கப்பட்டனர். நேற்று காலை முதல்வர் சித்தராமையா பெலகாவிக்கு வரவிருந்ததால், நேற்று முன்தினம் இரவே நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து நேற்று கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் டி.ஜி.பி., நாராயண் பரமணி கூறியதாவது:
வழக்கமாக ஊர்வலம் ஜல்கரா ஹள்ளி பகுதியிலே செல்லும். இம்முறை கடாக் ஹள்ளி கிராமத்தில் வேறு சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் சென்றுள்ளது. இந்த பகுதியில் ஊர்வலம் செல்வதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. அனுமதியின்றி ஊர்வலம் சென்றதால் மோதல் ஏற்பட்டது.
கண்காணிப்பு கேமரா, மொபைல் வீடியோக்கள் மூலம் தாக்குதலில் ஈடுபட்ட 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. நிலைமை நேற்று முன்தினம் இரவே கட்டுக்குள் வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.