7ம் வகுப்பு பருவ தேர்வு இன்று தொடக்கம் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க முடிவு
7ம் வகுப்பு பருவ தேர்வு இன்று தொடக்கம் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க முடிவு
ADDED : செப் 22, 2026 10:11 PM
பெங்களூரு: கர்நாடகாவில் ஏழாம் வகுப்புக்கு, இடை பருவ தேர்வு இன்று துவங்குகிறதுதொடங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பொதுவான வினாத்தாள் வழங்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வின் போது, மாணவர்களுக்கு ஏற்படும் பயத்தை போக்கும் வகையில், 5, 8, 9ம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தும் முயற்சியை, கர்நாடக அரசு முன்னெடுத்தது.
இதற்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், மாணவர்களுக்கு பொது தேர்வு பயத்தை போக்கும் வகையில், 7 ம் வகுப்பில் இருந்தே, பொது தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது.
கர்நாடகாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம், 7ம் வகுப்புக்கு, இடை பருவ தேர்வு நடக்கும்.
இதற்கான வினாத்தாள்களை மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகள் அல்லது பள்ளி ஆசிரியர்களே தயாரிப்பர்.
இந்த ஆண்டு மாநிலம் முழுதும், ஒரே மாதிரியான பொதுவான வினாத்தாள் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.
அதன்படி, இன்று முதல் 30ம் தேதி வரை, 7ம் வகுப்புக்கான, இடை பருவ தேர்வு நடக்கிறது.
மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பொதுவான வினாத்தாள் வழங்கப்படுகிறது.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், பள்ளிகளில் நடத்தப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.
ஆறு பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. இதில், 40 மதிப்பெண்கள் எழுத்து தேர்வு; பத்து மதிப்பெண்கள் வாய்மொழி தேர்வு.
