செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலை பள்ளங்களை மூட கெடு
செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலை பள்ளங்களை மூட கெடு
ADDED : ஆக 29, 2026 11:22 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரில் சாலை பள்ளங்களை செப்டம்பர் மாத இறுதிக்குள் மூடுமாறு, ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. சாலை பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளில் உயிரிழப்புகளும் நடக்கின்றன. இதற்கு தீர்வு காண்பதற்காக,பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா,ஜி.பி.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.
அவர் பேசியதாவது:
பெங்களூரில் உள்ள சாலைகளை மேம்படுத்த திட்டம் உள்ளது. சாலை மேம்பாட்டு பணிகள் தணிக்கை செய்யும் முறை அமல்படுத்தப்படும். பெங்களூரின் பிரதான சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுவதற்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் கெடு விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
