/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி; முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
/
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி; முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி; முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி; முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
ADDED : டிச 22, 2025 05:37 AM

பெங்களூரு: ''கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' என முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
கர்நாடக ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் 'கர்நாடக ஒலிம்பிக் - 2025' விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடந்தது.
கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், அசோசியேஷன் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில், பல விளையாட்டுகளில் சாதித்தவர்களுக்கு முதல்வர் சித்தராமையா பரிசு வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது:
காங்கிரஸ் அரசு விளையா ட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 6 கோடி ரூபாயும்; வெள்ளி வென்றால் 4 கோடி ரூபாயும்; வெண்கலம் வென்றால் 3 கோடி ரூபாயும் பரிசாக தரப்படும். இது, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு.
கர்நாடக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்வர் என நம்புகிறேன். அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. போலீசில் 2 சதவீதமும்; வனத்துறையில் 3 சதவீதமும் இடஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, விளையாட்டு துறையில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.
அடுத்த மாதம், அரசு வேலையில் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படும்.
கடினமாக உழைத்து இலக்கை அடைய வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தால், ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல முடியும். விளையாட்டில் இலக்குகளை அடைவது வாழ்க்கையின் இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

