sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு

 பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு

 பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு


ADDED : ஏப் 16, 2026 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:06 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மாண்டியா செல்ல பெங்களூரு வந்த பிரதமர் மோடியிடம், 18 கோரிக்கைகள் கொண்ட மனுவை, முதல்வர் சித்தராமையா வழங்கினார்.

மாண்டியா மாவட்டம் ஆதிசுஞ்சனகிரி மடத்துக்கு செல்வதற்காக, நேற்று காலை பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

அப்போது முதல்வர் சித்தராமையா, மைசூரு தலைப்பாகை, சால்வை அணிவித்து வரவேற்றார். பின், பிரதமரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது:

மேகதாது குடிநீர் திட்டம் போன்ற மாநிலத்தின் முக்கிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு, உடனடியாக ஒப்புதல்.

கலசா பண்டூரி எனும் மஹதாயி திட்டத்துக்கு வன விலங்கு வாரியத்திடம் அனுமதி பெற்றுத்தருதல்.

கிருஷ்ணா மேலணை திட்டம் - 3ஐ தேசிய திட்டமாக அறிவித்து, அரசிதழில் அறிவிப்பு வெளியிடுதல்.

பத்ரா மேலணை திட்டத்துக்காக, 5,300 கோடி ரூபாய் மா னியத்தை உடனடியாக விடுவித்தல்.

நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மாநிலத்துக்கு, 5,495 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை மானியமும், பெங்களூரில் குறிப்பாக உள்கட்டமைப்புக்காக 6,000 கோடி ரூபாயும் விடுவித்தல்.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பங்காக 17,554 கோடி ரூபாய், கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படும் 2,860 கோடி ரூபாய் மானியம் வழங்குதல்.

கோலாரில் ரயில் பெட்டி தொழிற்சாலை திறப்பதற்கும், பெங்களூரு - மும்பை அதிவேக ரயில் வழித்தடம், பெங்களூரு புறநகர் ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தல்.

கர்நாடகாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொதுத்துறை நிறுவனம் நிறுவுதல்.

ராய்ச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுதல்.

மாநி ல அரசால் செயல்படுத்தப்பட்ட 56 சதவீத இடஒதுக்கீட்டை அரசிய லமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பது; சில பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மத்திய பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது உட்பட 18 கோரிக்கைகள் இ டம் பெற்றிருந்தன.

முன்னதாக, முதல்வர் சித்தராமையாவை தன் அருகில் அழைத்து, அவர் காதில் பிரதமர் ஏதோ சொன்னார்.

இவ்விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us