sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சினிகடலை

/

சினிகடலை

சினிகடலை

சினிகடலை


ADDED : ஜூலை 10, 2025 11:03 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குத்தாட்டத்துக்கு வரவேற்பு

நடிகை ஸ்ரீலீலாவுக்கு கன்னடம், தெலுங்கு மொழிகளில் பட வாய்ப்பு குறையவில்லை. இருந்தாலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பு கிடைத்தாலும் மறுப்பது இல்லை. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகன் கிரீட்டி நாயகனாக அறிமுகமான 'ஜூனியர்' திரைப்படம், ஜூலை 18ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் நடிகை ஸ்ரீலீலா ஆடிய ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. இதுகுறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'இந்த பாடல் 'வைரல் ஒய்யாரி' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இப்பாடலை ஹரிப்பிரியா மற்றும் தீபக் பாடியுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. பாடல் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது' என்றனர்.

* ஏமாந்த நாயகன்

ஹரிஷ்ராஜ் இயக்கி, நாயகனாக நடிக்கும் 'வெங்கடேஷாய நமஹ' திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது. இது பற்றி அவர் கூறுகையில், ''இதில் குடும்ப சென்டிமென்ட், காதல் என, அனைத்தும் உள்ளது. மென் பொறியாளர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என் தாயாக மூத்த நடிகை உமாஸ்ரீ நடித்துள்ளார். படத்தின் நாயகன் வெங்கடேஷனை காதலிக்கும் இளம்பெண் ஏமாற்றி, கைவிட்டு செல்கிறார். அதன்பின் நாயகனின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை, நகைச்சுவையாக கூறியுள்ளோம். பெரும்பகுதி படப்பிடிப்பு பெங்களூரில் நடத்தப்பட்டது,'' என்றார்.

* பாரம்பரிய பாதுகாப்பு

விஜய ராகவேந்திரா, ரஞ்சனி நாயகன், நாயகியாக நடித்துள்ள 'ஸ்வப்ன மண்டபம்' திரைப்படம், ஜூலை 25ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் கதை குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'பாரம்பரிய இடங்களை பாதுகாப்பது குறித்த கதை கொண்டது. கிராமத்தில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்வப்ண பண்டபத்தை, சிலர் இடித்துவிட்டு வேறு நோக்கத்துக்கு பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இதை நாயகன், நாயகியை தடுத்து நிறுத்துவதே கதையின் சாராம்சமாகும். கதையில் பல திருப்பங்கள் இருக்கும்' என்றனர்.

* நடிகை குஷி

நடிகை சோனல் மாந்தரோ திருமணத்துக்குப் பின், திரைக்கு வந்த 'மாதேவா' திரைப்படம் வெற்றிகரமாக ஓடுவதால், குஷி அடைந்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், ''திருமணமான பின்னும், எனக்கு பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஆனால் நான் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்துக்கு முன்பு, நான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக் கொடுக்கிறேன். எனக்கு நல்ல கதை, கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. திருமண நேரத்தில் நான் பருமனாக இருந்தேன். டயட் இருக்க முடியவில்லை. படப்பிடிப்பில் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. 'தல்வார் பேட்' படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்,'' என்றார்.

* மர்ம முடிச்சு

நடிகை மாலாஸ்ரீ, சமீப ஆண்டுகளாக ஆக்ஷன் படங்களில், அதிகம் நடிக்கிறார். இவை சூப்பர் ஹிட் ஆகின்றன. அந்த வரிசையில் 'பென் டிரைவ்' படமும் சேர்ந்துள்ளது. கதை குறித்து படக்குழுவினர் கூறுகையில், 'பெண் போலீஸ் அதிகாரிக்கும், அரசியல்வாதி மகனுக்கும் இடையே நடக்கும் கதையாகும். படத்தில் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. இவற்றை ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும். இதில் மாலாஸ்ரீயுடன், நடிகை தனிஷா குப்புன்டாவும், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கடந்தாண்டு கர்நாடகாவில், பரபரப்பை ஏற்படுத்திய 'பென்டிரைவு'க்கும், எங்கள் படத்துக்கும் சம்பந்தம் இல்லை' என்றனர்.

* துஷ்ட சக்தி பிடி

கன்னடத்தில் 'ஹாரர்' கதை கொண்ட திரைப்படங்கள், அவ்வப்போது திரைக்கு வந்து, ரசிகர்களை மிரட்டுகின்றன. தற்போது திரைக்கு வர தயாராகும், 'பிளடி பாபு'வும் அதே போன்ற கதை கொண்டதாகும். இதுகுறித்து, இயக்குநர் ராஜேஷ மூர்த்தி கூறுகையில், ''கதையில் பல சுவாரஸ்யமான திருப்புமுனைகள் இருக்கும். யஷஸ்வா, ஸ்மிதா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். நாயகி எதிர்பாராமல் துஷ்ட சக்தியின் பிடியில் சிக்குகிறார். அவரை நாயகன் போராடி மீட்பதே கதையாகும். புதிய தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தியுள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us