sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காட்டு யானை தாக்கி காபி விவசாயி பலி

 காட்டு யானை தாக்கி காபி விவசாயி பலி

 காட்டு யானை தாக்கி காபி விவசாயி பலி


ADDED : மார் 13, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குடகு: குடகு மாவட்டத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. காபி விவசாயி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

கர்நாடகாவின் குடகு, சிக்கமகளூரு, ஹாசன், மைசூரு என, பல்வேறு மாவட்டங்களில், காட்டு யானைகளின் தொந்தரவால் மக்கள் தத்தளிக்கின்றனர். பயிர்களை மிதித்து சேதப்படுத்துவதுடன், மனிதர்களையும் மிதித்து கொல்கின்றன.

குடகு மாவட்டத்தில், அடுத்தடுத்து யானைகளால் உயிரிழப்புகள் நடக்கின்றன. சமீபத்தில், குஷால் நகரின், வால்னுாரில் நஞ்சராய பட்டணா கிராம பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் ஜலஜாக்ஷியை, காட்டு யானை தாக்கி கொன்றது. இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், பி.யு.சி., மாணவி பூஜாவை, யானை மிதித்து கொன்றது. தற்போது, காபி விவசாயியை, யானை தாக்கி கொன்றதால் மக்கள் கிலி அடைந்துள்ளனர்.

குடகு மாவட்டம் விராஜ்பேட் தாலுகா, சித்தாபுரா அருகே காபி விவசாயி கணபதி, 49, என்பவருக்கு சொந்தமான காபி தோட்டம் உள்ளது. இவர் நேற்று காலை தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காட்டு யானை, விவசாயியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் நடந்த இடத்தை, வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us