/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.15,000 கோடியை தாண்டியது கோவை ஐ.டி., துறையின் ஏற்றுமதி
/
ரூ.15,000 கோடியை தாண்டியது கோவை ஐ.டி., துறையின் ஏற்றுமதி
ரூ.15,000 கோடியை தாண்டியது கோவை ஐ.டி., துறையின் ஏற்றுமதி
ரூ.15,000 கோடியை தாண்டியது கோவை ஐ.டி., துறையின் ஏற்றுமதி
ADDED : செப் 17, 2025 03:01 AM

கோவை
: கோவையின் ஐ.டி., துறை ஏற்றுமதி, 2024--2025ம் நிதியாண்டில்,
15,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. லோக்சபாவில் எழுப்பிய
கேள்விக்கான பதில் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல தரவுகளின்
படி, இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில்
இரண்டாம் நிலை நகரங்களில், கோவை முக்கிய ஐ.டி., கேந்திரமாக
உருவெடுத்துள்ளது. 2024-2025ம் நிதியாண்டில், கோவையின் ஐ.டி., துறை
ஏற்றுமதி 15,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
மஹாராஷ்டிரா
ஹிங்கோலி தொகுதி எம்.பி., நாகேஷ் பாபுராவ் ஷிண்டே பாட்டில் அஸ்திகர்,
ஐ.டி., துறையில் எஸ்.டி.பி.ஐ., குறித்து எழுப்பிய கேள்விக்கு,
லோக்சபாவில், அளித்த பதிலில், கோவையின் ஐ.டி., துறை வளர்ச்சி குறித்த
தரவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழகத்தின்
பொருளாதார வளர்ச்சியில் ஐ.டி., துறை முக்கிய பங்காற்றி வருகிறது.
மாநில ஜி.டி.பி.,யில் 15 சதவீத பங்களிப்பு ஐ.டி., துறையில் இருந்து
வருகிறது. இந்தியாவில் ஐ.டி., துறையில் செய்யும் முதலீட்டில், 11
சதவீதத்தை தமிழகம் ஈர்க்கிறது.
தமிழகத்தில் 2ம் நிலை
நகரங்களில், ஐ.டி., ஏற்றுமதியில் கோவை முதலிடத்தில் உள்ளது. கோவை
கடந்த நிதியாண்டில், 15,106 கோடி ரூபாய் ஐ.டி., ஏற்றுமதியை
மேற்கொண்டுள்ளது. இரண்டாவது இடத்தில், மதுரை, 1,905 கோடி ரூபாய்
ஏற்றுமதி செய்துள்ளது.
கோவையில்
தொழிற்கல்விச் சூழல், திறன்மிகு பணியாளர்கள் ஆகியவை இதனை
சாதித்துள்ளன. எல்காட், கே.ஜி.ஐ.எஸ்.எல்., ஸ்பான் வெஞ்சர்ஸ் ஆகிய
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து, கடந்த நிதியாண்டில் 11,986
கோடி ரூபாய்க்கு ஐ.டி., துறையில் ஏற்றுமதி நடந்துள்ளது.
இந்த
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் மட்டும் 69,480 பேர்
பணிபுரிகின்றனர். இதுதவிர, எஸ்.டி.பி.ஐ., எனப்படும் இந்திய
மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் இருந்து, 3,119 கோடி ரூபாய்க்கு
ஏற்றுமதி நடந்துள்ளது.
இது,
முந்தைய நிதியாண்டில், 2,548 கோடிரூபாயாக இருந்தது. இதன்படி, கடந்த
நிதியாண்டில் கோவையில் இருந்து, 15,106 கோடி ரூபாய் மதிப்பில்
ஐ.டி.,ஏற்றுமதி நடந்துள்ளது.
புதிய நிறுவனங்களின் துவக்கம்,
விரிவடையும் ஐ.டி., பார்க்குகள், வெளிநாட்டு முதலீடுகள் என,
இத்துறையில் அதிவேக மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால், நடப்பாண்டில்
துறையின் வளர்ச்சி, 30 சதவீதத்தைத் தாண்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
*