/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி: சுயதொழிலுக்கு கலெக்டர் உதவி
/
பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி: சுயதொழிலுக்கு கலெக்டர் உதவி
பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி: சுயதொழிலுக்கு கலெக்டர் உதவி
பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி: சுயதொழிலுக்கு கலெக்டர் உதவி
ADDED : டிச 18, 2025 07:12 AM

கோலார்: மாற்றுத் திறனாளி பிச்சை எடுப்பதை தவிர்க்க, அவருக்கு சுயதொழில் தொடங்க, உதவி செய்யப்பட்டது.
கோலார் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி, சுற்றுப்புற சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய நகர்வலம் சென்றார். அப்போது கோலார் பஸ் நிலையத்தில் காசிம் கான், 56, என்ற நடக்க முடியாத மாற்றுத் திறனாளி பிச்சை எடுப்பதை கவனித்தார். அவரிடம் விசாரித்தார்.
சிந்தாமணியை சேர்ந்த அவர், விபத்து ஒன்றில் காலை இழந்தவர். கோலார் ரஹ்மத் நகரில் வாடகை வீட்டில் குடியேறினார். பிச்சை எடுப்பதையே தொழிலாக கொண்டவர் என தெரியவந்தது. இவருக்கு மனைவி மட்டும் உள்ளார். கோலார் நகரின் ஆட்டோக்காரர்கள், காசிம்கானுக்கு ஏதாவது உதவுமாறு கலெக்டரிடம் கோரினர்.
இதையடுத்து, கோலார் நகராட்சி ஆணையர் நவீன் சந்திராவிடம், அவருக்கு உதவும்படி கூறியுள்ளார். இதன்படி, மின் சக்தியால் இயங்கும் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
சிறு வியாபாரம் செய்ய பெட்டிக்கடை வைத்து நடத்திக்கொள்ள உதவுவதாக ஆணையர் உறுதி அளித்தார். பிச்சை எடுக்கும் தொழிலுக்கு முழுக்கு போடும்படி அறிவுறுத்தி உள்ளார்.

