தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வரும் 10ல் மாலுாரில் காங்., மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்டார் கலெக்டர்

 வரும் 10ல் மாலுாரில் காங்., மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்டார் கலெக்டர்

 வரும் 10ல் மாலுாரில் காங்., மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்டார் கலெக்டர்


ADDED : ஆக 08, 2026 07:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 07:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோலார்: அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட காங்கிரஸ் மாநாடு, ஆகஸ்ட் 10ம் தேதியன்று, மாலுாரில் நடக்கவுள்ளது.

இதில் முதல்வர் சிவகுமார், 3,200 கோடி ரூபாய் செலவிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பார்.

கோலார் மாவட்டம், மாலுார் தாலுகா புறநகரின், சொக்கன்டஹள்ளி அருகில், காங்கிரசின் பிரம்மாண்ட மாநாடு நடக்கவுள்ளது. இதற்காக மேடை அமைக்கப்பட்டுள்ளது.

கோலார் மாவட்ட கலெக்டர் ரவிகுமாரும், எம்.எல்.ஏ., நஞ்சேகவுடாவும், நேற்று அங்கு சென்று முன்னேற்பாடுகளை பார்வையிட்டனர்.

பின், மாவட்ட கலெக்டர் ரவிகுமார் அளித்த பேட்டி:

இம்மாதம் 10ம் தேதியன்று, மாலுாரில் காங்கிரஸ் மாநாடு நடக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர், எம்.பி.,க்கள், அமைச்சர்கள் உட்பட, பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மொத்தம், 3,200 கோடி ரூபாய் செலவிலான பணிகளை, துவக்கி வைப்பதற்காக இந்த மாநாடு நடக்கிறது. இதில், 50,000 - 60,000 பேர் வரை பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கிறோம்.

மேம்பாலம் பணிகள், ஏரி மேம்பாடு, புதிய பஸ் நிலையம், மருத்துவமனை கட்டடம் என, பல்வேறு பணிகளின் அடிக்கல் நாட்டு விழா நடக்கின்றது. முதல்வரின் உத்தரவுபடி, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

தாலுகா நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துடன், அனைத்து துறை அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர்.

போலீஸ் துறை, பஞ்சாயத்துராஜ் உட்பட, மற்ற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு வசதி செய்யப்படுகிறது. பொது மக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாமல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து, மாநாட்டை வெற்றிகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்கு ஊடகங்களின் ஆதரவும் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us