போலீஸ் துறையில் சீர்திருத்தம் அதிகாரிகள் தலைமையில் குழு
போலீஸ் துறையில் சீர்திருத்தம் அதிகாரிகள் தலைமையில் குழு
ADDED : செப் 30, 2026 03:43 AM
பெங்களூரு: போலீஸ் துறையில் சீர்திருத்தங்கள் தொடர்பாக, ஓய்வு டி.ஜி.பி.,க்கள் தலைமையில் மூன்று குழு அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் போலீஸ் துறையில் நிர்வாக வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும், காவல் நிலையங்களில் செயல்பாடுகள், இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்கள் சரியாக கையாளப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையிலும், மக்களுக்கு கிடைக்கும் சேவை தரத்தை மேம்படுத்தவும் ஓய்வு டி.ஜி.பி., ஆர்.கே.தத்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா, பொதுப்பிரிவு டி.ஐ.ஜி., சஞ்சீவ் பாட்டீல், பெங்களூரு தென்கிழக்கு மண்டல டி.சி.பி., முகமது சுஜிதா ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவர்.
அதுபோல, போலீஸ் துறை யின் தற்போதைய உள்கட்டமைப்பு, உபகரணங்கள் நிலை, அவசர தேவைகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்ய, ஓய்வு டி.ஜி.பி., எம்.என்.ரெட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் தொடர் பு, தளவாடங்கள், நவீனமயமாக்கல் துறையின் கூடுதல் டி.ஜி.பி., முருகன், லோக் ஆயுக்தா ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வரர் ராவ், தடய அறிவியல் ஆய்வக டி.ஐ.ஜி., திவ்யா கோபிநாத், வயர்லெஸ் பிரிவு எஸ்.பி., ரிஷ்யந்த் ஆகியோர் உறுப்பினர்களாக பணியாற்றுவர்.
அதுபோல, போலீஸ் துறையில் பணியாற்றுவோர் சந்திக்கும் பணிச்சுமை, பணியிடங்கள் எண்ணிக்கை, ஆள்சேர்ப்பு விதிகளை ஆய்வுசெய்து தேவையான பரிந்துரை வழங்க, ஓய்வுபெற்ற டி.ஜி.பி., கமல்பந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் நிர்வாக பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சவுமேந்த் முகர்ஜி, பொருளாதார குற்றப்பிரிவு துறை ஐ.ஜி., சேத்தன் சிங் ரத்தோட், நிர்வாக பிரிவு டி.சி.பி., குல்தீப் குமார் ஜெயின் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
இந்த மூன்று குழுக்களும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை ஆய்வு செய்து, இரண்டு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே உத்தரவிட்டுள்ளார்.
