/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்ய குழு
/
மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்ய குழு
மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்ய குழு
மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்ய குழு
ADDED : நவ 22, 2025 05:04 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் மாநில கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அறிக்கையை ஆய்வு செய்ய, இரண்டு நாட்களில் குழு அமைக்கப்படும்,'' என்று, உயர்கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறி உள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்க, கர்நாடக அரசு மறுக்கிறது. புதிய கல்வி கொள்கையின் மூலம், கர்நாடகாவில் ஹிந்தியை திணிக்க முயற்சி நடப்பதாகவும், கன்னடம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் போதும் என்றும், முதல்வர், அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மாநில கல்வி கொள்கையை தொடர்ந்து அமல்படுத்துவது தொடர்பாக, சுக்தேவ் தோரட் என்பவர் தலைமையில் ஆணையத்தை அரசு அமைத்தது. இந்த குழு மூன்று மாதத்திற்கு முன்பே அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டு உள்ளது.
அறிக்கை தொடர்பாக, உயர் கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர் கூறியதாவது:
மாநில கல்வி கொள்கை தொடர்பான அறிக்கை, மூன்று மாதங்களுக்கு முன்பே அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எனது துறையில் முதன்மை செயலர்கள் மாற்றத்தால், அந்த அறிக்கையை ஆய்வு செய்ய, குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
அறிக்கையை ஆய்வு செய்ய, இரண்டு நாட்களில் குழு அமைக்கப்படும். குழு ஆய்விற்கு பின், அமைச்சரவையில் சமர்பிக்கப்படும். குழு அமைக்க நான் உத்தரவிட்டு இருந்தாலும் எனது துறையின் முதன்மை செயலர் குஷ்பு கோயல் சவுத்ரி கவனத்திற்கு அது வரவில்லை என்ற தகவல் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, அவசர, அவசரமாக தேசிய கல்வி கொள்கையை செயல்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஆணையம் உருவாக்கப்பட்டது. அறிக்கையை பொது விவாதத்திற்கும் வெளியிடுவோம்.
பல்கலைக்கழகம் மூடப்பட்டால் அதில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் குறித்து எந்த தெளிவான முடிவும் வெளியிடப்படவில்லை. இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லை. இந்த பல்கலைக்கழகங்களில், இடஒதுக்கீடு கொள்கையை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

