தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/காமன்வெல்த் பளு துாக்கும் போட்டி மைசூரு பெண் தேர்வு

காமன்வெல்த் பளு துாக்கும் போட்டி மைசூரு பெண் தேர்வு

காமன்வெல்த் பளு துாக்கும் போட்டி மைசூரு பெண் தேர்வு


UPDATED : நவ 27, 2026 12:00 AM

ADDED : நவ 26, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 12:00 AM ADDED : நவ 26, 2026 08:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: மங்கோலியாவில் அடுத்த மாதம் நடக்க உள்ள, ‘ஆசிய கிளாசிக் மற்றும் எக்யூப்டு பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப்’ போட்டிக்கு, இந்தியா சார்பில், மைசூரைச் சேர்ந்த அலிபியா வாக் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

கனடாவின் வின்னபெக்கில், ‘கிளாசிக் அண்ட் எக்யூப்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப் – 2026’ போட்டிகள் நடந்தன. பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில், மைசூரைச் சேர்ந்த அலிபியா வாக், 40; பங்கேற்றார். ‘ஸ்குவாட்’ பிரிவில் 170 கிலோவும்; பெஞ்ச் பிரசில் 80 கிலோ; டெட்லிப்டில் 175 கிலோவும் என அனைத்திலும், 425 கிலோ எடை துாக்கி தங்கப்பதக்கம் வென்றார்.

அடுத்த மாதம் டிச., 1 முதல் 11ம் தேதி வரை மங்கோலியாவின் உலான்பட்டரில் நடக்க உள்ள, ஆசிய கிளாசிக் மற்றும் எக்யூப்டு பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.

அலிபியா வாக் கூறியதாவது:

திருமணத்துக்குப் பின் கணவர், குழந்தைகள் என குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன். வீட்டு வேலைகளைச் செய்வதில் கவனம் செலுத்தியதில் பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு நாள், ‘வாழ்க்கையில் ஒரு கட்டத்தை அடைந்தபோது, எனக்காக நான் என்ன செய்தேன்’ என்று கேட்டுக் கொண்டேன். அதற்கான பதில் எனக்கு பளு துாக்குதலில் கிடைத்தது.

பளு துாக்குவது ஆண்களின் வேலை என்பது வெறும் கட்டுக்கதை. பெண்கள் மனரீதியாக மிகவும் வலிமையானவர்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும், தங்கள் உடல் வலிமையைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

தினமும் உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று பளு துாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டேன். பின், படிப்படியாக எடைகளை அதிகரித்துக் கொண்டே வந்தேன். 2019ல் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, வெண்கல பதக்கம் வென்றேன். அன்று துவங்கிய பதக்க வேட்டை, இன்றும் தொடர்கிறது.

முறையான பயிற்சி இல்லாமல், எந்த விளையாட்டிலும் சிறப்பாக ஜொலிக்க முடியாது. என் வெற்றிக்கு பயிற்சியாளர் சந்தனுக்கு நன்றி கூற கடமைபட்டிருக்கிறேன். அவர் தான், எனக்கு ஆதரவும், உத்வேகமும் அளித்தார். நான் பங்கேற்கும் அனைத்து போட்டிகளுக்கும் அவர் என்னுடன் வருகிறார்.

கேரள மா நி லம், ஆலப்புழாவில் 2023ல் நடந்த ஆசிய பளு துாக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம். அந்த போட்டியில், 400 கிலோ எடையை துாக்கி தங்கப்பதக்கம் வென்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us