/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் நிறுவனங்கள் மார்ச் 7க்குள் பதிய உத்தரவு

ADDED : பிப் 25, 2026 07:27 AM
பெங்களூரு: 'கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தனியார் நிறுவனங்கள், மார்ச், 7ம் தேதிக்குள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும்' என, பெங்களூரு குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரில் உள்ள மேன்ஹோல் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தனியார் நிறுவனங்கள் அடுத்த மாதம், 7ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இந்த நிறுவனங்களில் உள்ள வாகனங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
இதை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றி நடக்க வேண்டும். ஒரு வேளை தனியார் நிறுவனங்கள் பதிவு செய்யாமல் பணியில் ஈடுபட்டால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.