/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
9ம் வகுப்பு மாணவர்களை அடித்ததாக 2 ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மீது புகார்
/
9ம் வகுப்பு மாணவர்களை அடித்ததாக 2 ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மீது புகார்
9ம் வகுப்பு மாணவர்களை அடித்ததாக 2 ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மீது புகார்
9ம் வகுப்பு மாணவர்களை அடித்ததாக 2 ஆசிரியர்கள், பள்ளி முதல்வர் மீது புகார்
ADDED : நவ 28, 2025 05:50 AM
சாம்ராஜ்நகர்: நவோதயா பள்ளி வகுப்பில் ஸ்மார்ட் போர்டில் பாடம் நடத்தி கொண்டிருந்த போது, ரிமோட் மூலம் டிவியை 'ஆப்' செய்து 'ஆன்' செய்ததால், நான்கு மாணவர்களை அடித்த இரு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் மீது போலீசில் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.
சாம்ராஜ்நகர் ஹொண்டரபாலு கிராமத்தில் ஜவஹர் நவோதயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஸ்மார்ட் போர்டில் கணினி பாடம் நடத்தப்பட்டு வந்தது.
ஸ்மார்ட் போர்டில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது, ரவி பிரகாஷ் உட்பட நான்கு மாணவர்கள் ரிமோட் மூலம் ஸ்மார்ட் போர்டை ஆப் செய்து, ஆன் செய்து விளையாடினர். இதனால், போர்டு பழுதாகி விட்டது.
எனவே, டிவி பழுது பார்க்க 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். இல்லை என்றால், 'டிசி' வாங்கி செல்லும்படி மாணவர்களிடம் கூறினர்.
இது குறித்து மாணவர்கள், தங்கள் பெற்றோரிடம் கூறினர். கோபமடைந்த பெற்றோர், மறுநாள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அதற்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்களுக்கு ஆதரவாக பேசி உள்ளார்.
இதையடுத்து, பள்ளி முதல்வர், கணினி வகுப்பு ஆசிரியர் புட்டராஜு, கணித ஆசிரியர் ஜிதேந்திர யாதவ் மீது சாம்ராஜ்நகர் ஈஸ்ட் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையில், கணினி பாடம் தங்களுக்கு புரியவில்லை என ரவி பிரகாஷ் உட்பட நான்கு மாணவர்கள், ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.
ஆசிரியர் மீண்டும் பாடம் சொல்லிக் கொடுத்தும், மாணவர்களுக்கு புரியவில்லை.
இதனால் கோபமடைந்த கணினி வகுப்பு ஆசிரியர் புட்டராஜு, கணித ஆசிரியர் ஜிதேந்திர யாதவ் ஆகியோர் மாணவர்களின் கன்னத்தில் அரைந்து, பிரம்பால் முதுகில் அடித்துள்ளதாக பெற்றோரிடம் மாணவர்கள் புகார் கூறியுள்ளனர்.

