/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய தம்பதி மீது புகார்
/
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய தம்பதி மீது புகார்
ADDED : நவ 28, 2025 05:34 AM
பேட்ராயனபுரா: வாகனங்களை வேகமாக அனுப்பி வைக்கவில்லை என்று கூறி, சுங்கச்சாவடியை ஊழியரை தாக்கிய தம்பதி மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு நைஸ் ரோட்டில் உள்ள சுங்கச்சாவடி கவுன்டரில் ஊழியராக வேலை செய்பவர் அருண் கவுடா, 24. இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தார். அப்போது ஒரு காரில் தம்பதி வந்தனர்.
தம்பதியின் காருக்கு முன்பு மூன்று வாகனங்கள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த நின்றன. நீண்ட நேரமாக அந்த வாகனங்கள் அங்கேயே நின்று கொண்டு இருந்தன. இதனால் கடுப்பான தம்பதி காரில் இருந்து இறங்கி வந்தனர்.
அருண் கவுடாவிடம் சென்று, எங்கள் முன்னால் நிற்கும் வாகனங்களை ஏன் வேகமாக அனுப்பி வைக்கவில்லை என்று கேட்டனர். இதனால் தம்பதிக்கும், அருணுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சுங்கச்சாவடி ஊழியர்கள் சமாதானம் செய்தனர்.
பின், சுங்கச்சாவடியை கடந்து சென்று காரை நிறுத்திய தம்பதி, சுங்கச்சாவடிக்கு வந்து அருணை தாக்கிவிட்டு தப்பினர். காயம் அடைந்த அவர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். தம்பதி மீது போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, காரில் இருந்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.

