ADDED : ஆக 29, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: மது போதையில் வாகனம் ஓட்டிய, 40 தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் தண்ணீர் லாரிகள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வேகமாக இயங்குகின்றன. இதை கருதி நேற்று முன்தினம் காலை 6:00 மணி முதல், காலை 9:00 மணி வரை போக்குவரத்து போலீசார் சோதனை செய்தனர்.
இதில், 1,476 தண்ணீர் லாரி ஓட்டுநர்களிடம் சோதனை செய்யப்பட்டது. 40 ஓட்டுநர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அனைவரின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 40 பேருக்கும் தலா, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இவர்களின் வாகன உரிமத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, போலீசார் பரிந்துரைத்தனர். இதுபோன்ற சோதனைகள் தொடரும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
