/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சரை விமர்சித்த எம்.எல்.ஏ., மீது புகார்
/
அமைச்சரை விமர்சித்த எம்.எல்.ஏ., மீது புகார்
ADDED : ஜன 27, 2026 04:53 AM
பெங்களூரு: பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறி, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சில நாட்களுக்கு முன் நடந்த சட்டசபை கூட்டத்தொடர் விவாதத்தில், நகர திட்டமிடல் துறை அமைச்சர் பைரதி சுரேஷை, ராஜாஜிநகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார் கடுமையாக விமர்சித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பெங்களூரு மத்திய மாவட்ட காங்கிரஸ் பிரசார குழு தலைவர்களான பிரகாஷ், மனோகர் தலைமையிலான குழுவினர், விதான் சவுதா போலீசில், எம்.எம்.ஏ., சுரேஷ்குமார் மீது நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரில் கூறப்பட்டு உள் ளது.

