/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகர மேம்பாட்டு ஆணையருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார்
/
நகர மேம்பாட்டு ஆணையருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார்
நகர மேம்பாட்டு ஆணையருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார்
நகர மேம்பாட்டு ஆணையருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது புகார்
ADDED : ஏப் 03, 2025 07:28 AM

மங்களூரு : மங்களூரு நகர மேம்பாட்டு ஆணைய கமிஷனருக்கு, மாந்த்ரீகம் செய்வதாக மிரட்டிய இடைத்தரகர்கள் மீது, போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
தட்சிணகன்னடா மாவட்டத்தின், மங்களூரு நகர மேம்பாட்டு ஆணைய கமிஷனராக பணியாற்றுபவர் நுார்ஜஹரா கானம். ஆணையத்தில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தங்களின் பணிக்காக, நகர மேம்பாட்டு ஆணைய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம், இடைத்தரகர்கள் பணம் பறித்து மோசடி செய்வதாக புகார் வந்தது.
இதை தீவிரமாக கருதிய நகர மேம்பாட்டு ஆணைய கமிஷனர் நுார் ஜஹரா கானம், இடைத்தரகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இவர்கள் நகர மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் நுழைய தடை விதித்தார்.
கமிஷனரின் கெடுபிடியால் இடைத்தரகர்கள் எரிச்சல் அடைந்தனர். தங்களுக்கு அலுவலகத்தில் தடை விதித்த கமிஷனருக்கு, மாந்த்ரீகம் செய்வதாக மிரட்டினர்.
இடைத்தரகர்கள் ஒன்று சேர்ந்து, 'வாட்ஸாப் குரூப்' அமைத்து கொண்டு, கமிஷனருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவரை அவமதித்து விமர்சித்தனர். போன் மூலமாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இவர்களின் தொந்தரவு அதிகரித்ததால், மங்களூரின் உர்வா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவரது புகார் அடிப்படையில், இடைத்தரகர் வஹாப், 45, உதவி இடைத்தரகர் சாபித், 25, ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, மங்களூரு நகர மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில், இடைத்தரகர் ஒருவர், அதிகாரியின் அலுவலகத்தில் புகுந்து, கோப்புகளில் திருத்தம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
இப்போது, இடைத்தரகர்கள் நகர மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் நுழைய தடை விதித்த கமிஷனரை இடைத்தரகர்கள் மிரட்டுகின்றனர்.

