தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஜி.பி.ஏ., தேர்தல் நடத்துவது அதிகாரிகளுக்கு தலைவலி

ஜி.பி.ஏ., தேர்தல் நடத்துவது அதிகாரிகளுக்கு தலைவலி

ஜி.பி.ஏ., தேர்தல் நடத்துவது அதிகாரிகளுக்கு தலைவலி


UPDATED : அக் 30, 2026 12:00 AM

ADDED : அக் 29, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:00 AM ADDED : அக் 29, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: எஸ்.ஐ.ஆருக்கு பின், ஜி.பி.ஏ., எல்லைக்குள், 59,08,151 வாக்காளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த வாக்காளர்களின் அடிப்படையில், ஐந்து மாநகராட்சிகளுக்கு எப்படி தேர்தல் நடத்துவது என, அதிகாரிகள் கைகளை பிசைகின்றனர்.

கடந்த ஆறு ஆண்டுகளாக, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கு தேர்தல் நடக்கவில்லை. அதிகாரிகள் நிர்வகிப்பில் செயல்படுகிறது. தற்போது ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வார்டுகளின் எண்ணிக்கையும் 198லிருந்து, 369 ஆக அதிகரித்துள்ளது.

நடப்பாண்டு டிசம்பருக்குள் ஜி.பி.ஏ.,வுக்கு தேர்தல் நடத்தும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடத்த வேண்டும். ஆனால், எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு பின், ஜி.பி.ஏ., எல்லைக்குள் 59,08,151 வாக்காளர்கள் மட்டுமே, எஞ்சியுள்ளனர். இந்த எண்ணிக்கை அடிப்படையில் தேர்தல் நடத்துவது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இதற்கு முன், 369 வார்டுகளிலும், சராசரியாக, 24,100 வாக்காளர்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. எஸ்.ஐ.ஆருக்கு பின், அந்த எண்ணிக்கை 16,000 என குறைந்துள்ளது.

பெங்களூரு மேற்கு மாநகராட்சியில், வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், கிழக்கு மாநகராட்சியில் குறைவாகவும் இருக்கும் என, அதிகாரிகள் கருதுகின்றனர்.

டிசம்பர் இறுதிக்குள் ஜி.பி.ஏ.,வின் ஐந்து மாநகராட்சிகளுக்கு முன்னேற்பாடுகளை செய்ய, போதிய அவகாசம் தேவைப்படும். எனினும், உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளதால், தேர்தலுக்கு தயாராக வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us