/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பஸ்சில் பெண் பயணியிடம் அநாகரிகம்: நடத்துநர் கைது
/
பஸ்சில் பெண் பயணியிடம் அநாகரிகம்: நடத்துநர் கைது
ADDED : ஏப் 25, 2025 05:43 AM

தட்சிண கன்னடா: மங்களூரில் இளம் பெண் பயணியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட அரசு பஸ் நடத்துநர் கைது செய்யப்பட்டார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் முடிபூவில் இருந்து ஸ்டேட் பாங்கிற்கு இம்மாதம் 22ம் தேதி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் புறப்பட்டது. பஸ்சில் இளம் பெண் பயணி, அமர்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்தார்.
இதை கவனித்த நடத்துநர் பிரதீப் காசப்பா நாயகர், 35, மற்றவர்களுக்கு தெரியாமல், பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். பஸ்சில் பயணித்த மற்றொரு பயணி, இதை படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இவ்வீடியோ வேகமாக பரவியது. இதை பார்த்த, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம், பிரதீப்பை, 'சஸ்பெண்ட்' செய்தது.
மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கூறுகையில், ''பெண்ணுக்கு நடத்துநர் தொல்லை கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதை வைத்து போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். நடத்துநர் பிரதீப் கைது செய்யப்பட்டார்,'' என்றார்.